விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கம்ப்யூட்டர் சார் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் கம்ப்யூட்டர் சார் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கம்ப்யூட்டர் சார் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இந்த வாரம் டாப் இடத்தை பிடித்துள்ளது. காரணம் சீரியலில் சமூக கருத்துக்களை மையமாக கொண்டு கதை கொண்டு செல்லப்படுவது தான். இந்நிலையில் கம்ப்யூட்டர் சார் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா படிக்காத பெண்ணாக இருந்தாலும் தனக்கு தெரிந்த வேலைகளில் கடின உழைப்பை போட்டு பெரிய தொழிலதிபராக அவர் முன்னேறி இருக்கிறார். ஆனால் அவருடைய கணவர் கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைத்து பாக்கியாவை வெறுக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லி பரீனா வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

மறுபக்கம் இந்த விஷயம் தெரிந்த கோபியின் தந்தை ராமமூர்த்தி மருமகளுக்கு ஆதரவாக இருக்கிறார். பாக்கியாவின் மூத்த மகன் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகளை பாக்கியா நல்ல மாமியாராக இருந்து தீர்த்து வைக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க, நடுவில் சில சமூக விழிப்புணர்வு குறித்த கதையை இயக்குனர் கொண்டு வருகிறார். ஏற்கனவே வங்கி மோசடி, விதவை மறுமணம் என பல விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கோவையில் பள்ளி மாணவிக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

‘அம்மன்’ சீரியல் அமல்ஜித் & பவித்ரா ஜோடிக்கு திருமணம்? அவர்களே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

பாக்கியாவின் மகள் இனியா பத்தாம் வகுப்பு படிக்க அவருடன் படிக்கும் தோழி ஒருவருக்கு கம்ப்யூட்டர் வாத்தியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அதனால் இனியாவின் தோழி நிகிலா தற்கொலை முயற்சி செய்கிறார். நிகிலாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுக்க தயங்க பாக்கியா போலீசில் புகார் கொடுக்கிறார். அதனால் பாக்கியாவிற்கு பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் கம்ப்யூட்டர் சார் கதாபாத்திரத்தில் வெற்றி முத்து என்பவர் நடித்து வருகிறார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் கேமரா மேன் ஆவார். அவருக்கு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் முதல் வாய்ப்பிலேயே தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!