மத்திய அரசில் ஆண்டிற்கு ரூ.17 லட்ச ஊதியத்தில் வேலை – 261 காலிப்பணியிடங்கள்
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CDAC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Manager, Sr. Project Engineer/ Project Lead/ Module Lead, Project Engineer & Project Associate பணிகளுக்கு 261 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் MCA/ B.E/ B.Tech அல்லது அதற்கு தொடர்புடைய டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்படுகிறது.
TN’s Best TNPSC Coaching Center
- Project Manager: 50 ஆண்டுகள், Project Engineer/ Project Lead/ Module Lead: 45 ஆண்டுகள், Other Posts: 35 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஆண்டுக்கு 17.52/-லட்சம் வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.