தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” என்ற முன்னணி சீரியலில் இளம் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை பரீனா. முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை அவருடைய பெயருடன் தனது ரசிகர்களுக்கு வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை வெண்பா:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் பிரபலமான பல வில்லிகள் இருக்கின்றன. ஆனால் இளம் வில்லியாக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா. வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். அவர் சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமாகிய நிலையில் பாரதி கண்ணம்மாவில் வில்லியாக முதன்முறையாக அறிமுகமானார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வெண்பா – அடுத்து வரப்போகும் எபிசோட்!
தன்னுடைய முதல் சீரியலிலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி புகழின் உச்சியில் இருந்த அவர், சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக சீரியலில் நடித்து வந்த அவர் பிரசவத்திற்கு ஒரு வாரம் இருக்கும் வரை சீரியல் படப்பிடிப்பிற்கு வந்தார். அதன் பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஒரு மாதம் ஆன நிலையில், சீரியலில் இருந்து அவர் ஓய்வில் இருந்து வந்தார். கடந்த வாரம் மீண்டும் தனது வேலையை தொடங்கியதாக இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டார்.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்ப பதிவு!
இவ்வளவு சீக்கிரமாக தனது வேலையை தொடங்கியதை நினைத்து ரசிகர்கள் பாராட்டுகளை குவித்தனர். இந்நிலையில் தன்னுடைய மகன் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்த அவர் சமீபத்தில் தனது மகனின் பெயர் சூட்டும் விழாவை இஸ்லாமிய முறைப்படி நடத்தி முடித்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனின் புகைப்படத்தை பகிர்ந்து ZAYN LARA RAHMAN என பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார். ரசிகர்கள் அழகான அவருடைய குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.