தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்ப பதிவு!

0
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்ப பதிவு!
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்ப பதிவு!
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 8,883 இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

விண்ணப்ப பதிவு:

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு தகுதி தேர்வாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை பயில முடியும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 1ம் தேதி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!

இந்நிலையில் தற்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6 ஆயிரத்து 958 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) ஆயிரத்து 925 இடங்கள் உள்ளன. இவ்வாறாக மொத்தம் 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து படிப்புகளுக்கும் இன்று முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஆயிரத்து 450 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இந்த கல்லூரிகள் அனைத்தும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்போது திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 12ம் தேதி நாட்டின் பிரதமர் மோடி அவர்களும், தமிழக முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் அந்த 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். எனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!