விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வெண்பா – அடுத்து வரப்போகும் எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது பல காதல் காட்சிகளுடன் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் வெண்பா வந்து பாரதியின் மனதை குழப்ப இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. பழைய கண்ணம்மா இருந்த வரை அரைத்த மாவையே அரைத்த இயக்குனர் தற்போது புதிய கண்ணம்மா வந்ததும் கதையில் விறுவிறுப்பை அதிகரித்து இருக்கிறார். கண்ணம்மா பாரதி சேர்ந்து வாழ தொடங்கி அவர்களுக்கு இடையே காதல் காட்சிகளை அதிகமாக கொண்டுவந்துள்ளனர். அதனால் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் சீரியலில் வில்லி வெண்பா ஜெயிலில் இருப்பதால் தொடர்ந்து கதை பாரதி கண்ணம்மா காதலை மட்டுமே சுற்றி இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் அமீருக்கு ரெட் கார்டு? ரசிகர்கள் கொந்தளிப்பு!
அதனால் வெண்பாவின் வில்லத்தனம் இனி வேண்டாம் இப்படியே கதை போகட்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தற்போது பிரசவம் முடிந்து மூன்றே வாரத்தில் பரீனா வெண்பாவாக களமிறங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் கையில் ஸ்டேதாஸ்கோப் வைத்திருப்பது போல காட்டப்பட்டது. அதை வைத்து வெண்பா இந்த கேஸ்ஸில் இருந்து வெளியே வந்து மீண்டும் டாக்டராக இருப்பார் என தெளிவாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? ஓமைக்ரான் நோய்த்தொற்று எதிரொலி!
மேலும் வெளியே வந்த வெண்பாவிற்கு பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. ஒழுங்காக இருக்கும் பாரதியை அவர் எப்படி கெடுக்க இருக்கிறார் என அடுத்து வார எபிசோடாக இருக்கும். அதனால் மீண்டும் கண்ணம்மாவிற்கு கஷ்டம் வர இருக்கிறது. ஆனால் இப்போது தான் சீரியல் நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சீரியலில் இயக்குனர் என்ன மாதிரி ட்விஸ்ட் வைத்திருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.