ஜீ தமிழில் “செம்பருத்தி” & “சத்யா 2” மெகா சங்கமம்? ஷபானா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
ஜீ தமிழ் சீரியல்களில் முன்னணி சீரியலாக இருக்கும் “செம்பருத்தி” மற்றும் “சத்யா 2” சீரியலில் நடிக்கும் பார்வதி ஷபானா மற்றும் சத்யா ஆயிஷா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் நடிகைகள்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக “செம்பருத்தி” மற்றும் சத்யா 2″ சீரியல் TRP பட்டியலில் இடம் பெறும் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல்களில் சுவாரசியத்தை அதிகப்படுத்த பல திருப்பங்களை கொண்டு வந்து இருக்கிறது. செம்பருத்தி சீரியலில் நடிக்கும் சபானாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பின் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் இணைந்த ‘பாக்கியலட்சுமி’ மயூரா – வைரல் புகைப்படம்!
இந்நிலையில் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஷபானா மற்றும் சத்யா 2 சீரியல் ஆயிஷா சேர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் செம்பருத்தி மற்றும் சத்யா சீரியல்கள் இணைந்து மெகா சங்கமம் நடக்க இருக்கிறதா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் ஷபானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சமீபத்தில் சத்யா சீரியல் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சத்யா 2 என கதையில் மாறுபாடுகளுடன் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஜீ தமிழ் இந்த முடிவு ரசிகர்களை கவருமா என பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் செம்பருத்தி சீரியலில் பல புதுமைகள் வெளியாகி வரும் நிலையில், இந்த இரண்டு சீரியல்களும் இணைந்தால் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.