BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.20.202/- ஊதியம்!!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் Operation Theatre Assistant ஆகிய பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். Science பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Bachelor of Science டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 1முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Best TNPSC Coaching Center – Join Now
விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர், அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,202/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிப்போரில் General/ OBC/ Ex-Serviceman/ Women பிரிவினர் ரூ.750/- மற்றும் SC/ ST/ EWS/ PH பிரிவினர் ரூ.450/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உடையவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.10.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.