IPL 2021 : வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்! SRH vs PBKS இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு தகவல்களை இங்கு காணலாம்.
SRH vs PBKS இன்று பலப்பரீட்சை:
ஐபிஎல்லில் இன்று இரவு நடக்க உள்ள 37வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த இரண்டு அணிகளும் தொடர் தோல்வியால் துவண்டு போயுள்ளன. ஐதராபாத் அணி 1 வெற்றி 7 தோல்வி என பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏறக்குறைய அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பறி போய் விட்டது.
எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டியலில் மேல் இடத்தை பிடிக்க திட்டமிடும். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். அதே போல் பஞ்சாப் அணியும் தொடர் தோல்விகளால் துவண்டு உள்ளது. எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டத்தில் களம் காண உள்ளது. அதனால் இனி வரும் போட்டிகள் அனைத்தும் பஞ்சாப் அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாகவே இருக்கும்.
கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 183 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடக்கத்தில் ராகுல், அகர்வால் வான வேடிக்கை காட்டிய போதிலும் அடுத்தடுத்த பேட்டர்கள் சொதப்பியதால் கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இதற்கு பரிகாரம் தேடும் வகையில் இன்றைய ஆட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதற்கட்ட ஆட்டத்தில் ஐதராபாத் அணி பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!
பிட்ச் ரிப்போர்ட்:
இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடக்க உள்ளது. பேட்டிங்கிற்கு உகந்த இந்த ஆடுகளத்தில் வான வேடிக்கைகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் இது வரை 14 முறை மோதியுள்ளது. அதில் இரண்டு அணிகளும் தலா 7 முறை வெற்றி பெற்றுள்ளன.
உத்தேச 11 அணி விவரம்:
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா (wk), மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (C), கேதர் ஜாதவ், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது
- பஞ்சாப் கிங்ஸ் – KL ராகுல் (c, wk), மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், இஷான் போரல், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, அடில் ரஷித், அர்ஷ்தீப் சிங்