IPL 2021 : பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி? இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!

0
IPL 2021 பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!
IPL 2021 பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!
IPL 2021 : பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி? இன்று ராஜஸ்தான் உடன் பலப்பரீட்சை!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு தகவல்களை இங்கு காணலாம்.

DC vs RR இன்று பலப்பரீட்சை:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 36வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கோதாவில் தடம் பதிக்க உள்ளன. டெல்லி அணி தொடர்ச்சியாக வெற்றியை குவித்து புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள்ளாகவே வலம் வருகிறது. பலம் வாய்ந்த அணியாக திகழும் டெல்லி  பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் வலுவாகவே உள்ளது. பேட்டிங்கில் பிரிதிவி, தவான், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பண்ட் ஆகியோர் பார்மில் உள்ளனர். மேலும் ஹெட்மேயர், ஸ்மித் மட்டையை சுழற்றும் பட்சத்தில் வலுவான ஸ்கோரினை நோக்கி பயணிக்கும்.

IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில்  சென்னை அணி அபார வெற்றி!

பந்து வீச்சிலும் ரபடா, அவேஷ் கான், அஸ்வின், அண்ரிச் நோர்டியா ஆகியோர் எதிரணிக்கு தொல்லை குடுத்து வருகின்றனர். முந்தைய போட்டியில் ஐதராபாத் அணியை 134 ரன்களில் சுருட்டி அசத்தியது. அதே உத்வேகத்துடன் இன்று களம் காணும். ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பஞ்சாபிற்கு எதிரான கடந்த போட்டியில் 185 ரன்கள் குவித்த போதிலும், பீலடிங்கில் இருந்த தவறு காரணமாக கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டிதாயிற்று. அதனால் இன்றைய ஆட்டத்தில் தவறுகளை சரி செய்து விட்டால் டெல்லி அணிக்கு சவால் அளிக்கலாம்.

இந்த சீசனில் முதற்கட்ட ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் சந்தித்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதற்கு பழி தீர்க்க வேண்டும் என டெல்லி அணி முயற்சிக்கும். மேலும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் முதல் அணியாக டெல்லி மாறிவிடும். இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

INDW vs AUSW 2nd ODI – 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி நடக்க இருக்கும் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியம் மைதானம் பேட்டிங்கிற்கு உகந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகள் இது வரை 23 முறை மோதியுள்ளது. அதில் டெல்லி 11 முறை, ராஜஸ்தான் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது.

உத்தேச 11 அணி விவரம்:
  • டெல்லி கேபிட்டல்ஸ் – பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (c & wk), மார்கஸ் ஸ்டோனிஸ் / ஸ்டீவ் ஸ்மித் / டாம் கர்ரன், சிம்ரான் ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, கார்த்திக் தியாகி, முஸ்தாபிஜூர் ரஹ்மான்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!