INDW vs AUSW 2nd ODI – 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி!

0
INDW vs AUSW 2nd ODI - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி!
INDW vs AUSW 2nd ODI - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி!

INDW vs AUSW 2nd ODI – 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி!

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி:

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்றது.

IPL திருவிழா 2021: SRH தமிழக வீரர் நடராஜனுக்கு பதில் உம்ரான் மாலிக்! கொரோனா எதிரொலி!

தற்போது 2வது நாள் போட்டி Harrup Park, Mackay மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க போராடினர். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 86 ரன்கள் (94 பந்துகள், 11 பவுண்டரி) ஷஃபாலி வர்மா 26 ரன்கள் குவித்தனர். அடுத்தடுத்த வீராங்கனைகள் சொதப்ப சற்று ரன் வேகம் தளர்ந்து போனது. அதன் பின்னர் இறங்கிய ரிச்சா கோஷ் (44), தீப்தி சர்மா (23), பூஜா வஸ்த்ரகர் (29), கோஸ்வாமி (28) ஆகியோரின் கணிசமான ஆட்டத்தினால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் டஹ்லியா மெக்ராத் 3 விக்கெட்டும், மோலினக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அலிசா ஹீலி (0), மெக் லேனிங் (6) சொற்ப ரங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அனாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர்கள் பெத் மூனி சதமடித்து அசத்தினார். மறுமுனையில் எலிஸ் பெர்ரி (2), ஆஷ்லே கார்ட்னர் (12) இவர்கள் சோபிக்கவில்லை. ஆறுதல் அளிக்கும் விதமாக டஹ்லியா மெக்ராத் 74 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்து திரில் வெற்றி பெற்றுள்ளது. சதமடித்து அசத்திய பெத் மூனி 125 ரன்கள் (133 பந்துகள், 12 பவுண்டரி) அக்கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!