IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!

0
IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!
IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!
IPL 2021, RCB vs CSK LIVE Updates: 6 விக்கெட் வித்தியாசத்தில்  சென்னை அணி அபார வெற்றி!

ஐபிஎல் இன்று நடக்க உள்ள 34வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. வெற்றியை நீதிகளும் முனைப்பில் சென்னை அணியும், தோல்வியை தவிர்க்க பெங்களூர் அணியும் வரிந்து கட்டி தயாராகின்றனர்.

தற்போது மணல் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் போட்டிகள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டுள்ளது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பெங்களுர் அணி 156 ரன்களை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்தது. அதன்பிறகு சென்னை அணியினர் 157 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது. இறுதியில் 18.1 பணத்தில் சென்னை அணியினர் 157 ரன்களை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • 18.1 ஓவர் – தோனி 17 வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்துள்ளார். சென்னை அணி 157 ரன்களை 3 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை வெற்றி பெற்றுள்ளது.
  • 17 ஓவர் – 17 ஓவர் முடிவில் சென்னை அணி 145 – 4 ரன்களை பெற்றுள்ளது.
  • 15 ஓவர் – ராயுடு 15. 1 மற்றும் 15.2 ல் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்துள்ளார். பின்னர், 15.4 பந்தில் அவர் ஹர்சத் பந்தில் ராயுடு அவுட் ஆகி உள்ளார்.
  • 15 ஓவர் – 14.5 ஓவரில் ரய்னா ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 15 ஓவர் முடிவில் 125/ 3 ரன்களை எடுத்துள்ளார்.
  • 14 ஓவர் – 14 வது பந்தில் ஹர்சது படேல் மொயீன் அலி அவுட் ஆகி உள்ளார். 118 / 3
  • 13 ஓவர் – 12.1 பந்தில் மொயீன் அலி சிக்ஸர் அடித்துள்ளார். 13 ஓவர் முடிவில் 112 /2 ரன்களை எடுத்துள்ளது.
  • 11 ஓவர் – மொயீன் அலி 10.4 பந்தில் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 11 ஓவர் முடிவில் சென்னை அணி 90/2 ரன்களை எடுத்துள்ளது.
  • 9.1 ஓவர் – மாக்ஸ்வெல் எறிந்த பந்தில் பிளஸி அவுட் அகி உள்ளார். ( 71/2 )
  • 8.2 ஓவர் – சாஹல் எறிந்த பந்தை அடித்த ருதுராஜ் பந்தை கோலி கேட்ச் பிடித்துள்ளார். (71/ 1)
  • 7 ஓவர் – 5.1 மற்றும் 5.3 பந்தில் பிளஸி ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்துள்ளார். 7 ஓவர் முடிவில் சென்னை அணியின் ருதுராஜ் ரன் அவுட் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ( 62/0 )
  • 5 ஓவர் – 3.1 மற்றும் 3.6 ஓவரில் ருதுராஜ் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்துள்ளார். மேலும், 4.2 பந்தில் ருதுராஜ் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 5 ஓவர் முடிவில் சென்னை அணி 43/0 ரன்களை அடித்துள்ளது.
  • 3 ஓவர் – 1.2 பந்தில் சென்னை அணியின் பிளஸி ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 3 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23/0 ரன்களை எடுத்துள்ளது.
  • 1ஓவர் – முதல் ஓவரில் பெங்களூர் அணியின் முகமது சிராஜ் பவுலிங் செய்கிறார். சென்னை அணியில் பிளஸி மற்றும் ருதுராஜ் இருவரும் பேட்டிங்கில் இறங்கியுள்ளனர். நான்காவது பந்தில் ருதுராஜ் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.முதல் ஓவர் முடிவில் சென்னை அணி 8 /0 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு 157 ரன்களை பெங்களூர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • 20 ஓவர் – 20 வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்சத் படேல் பிராவோ எறிந்த பந்தில் அவுட் ஆகியுள்ளார். ஆட்டத்தில் முடிவில் 156 ரன்களை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்துள்ளது.
  • 19.2 ஓவர் – கடைசி ஓவரில் மாக்ஸ்வெல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். ( 154 / 5 )
  • 19 ஓவர் – 19 ஓவர் முடிவில் முடிவில் 154/ 3 ரன்களை பெங்களூர் அணி எடுத்துள்ளது.
  • 18. 2 – 18 வது ஓவரில் பெங்களூரின் மாக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 18.2ல் டிம் டேவிட் 1 ரன் எடுத்து அவுட் ஆகியுள்ளார்.
  • 17 ஓவர் – 15.4 ஓவரில் பெங்களூரு அணியின் படிக்கல் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 16.3 ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 16.5 ஓவரில் டிவில்லியர்ஸ் தனது விக்கெட்டை இழந்துள்ளார். அடுத்த பந்தில் படிக்கல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 17 ஓவர் முடிவில் 140/ 3.
  • 15 ஓவர் – 15 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 120 / 1 ரன்களை எடுத்துள்ளது.
  • 13.2 ஓவர் – பிராவோ எறிந்த பந்தில் விராட் கோலி அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடித்துள்ளார். இதனால் கோலி 41 பந்துகளை 53 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்துள்ளார்.
  • 13 ஓவர் – 13 ஓவர் முடிவில் 111/ 0 ரன்களை எடுத்துள்ளது.
  • 11 ஓவர் – 9.3 பந்தில் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 11 ஓவர் முடிவில் 96 /0 ரன்களை எடுத்துள்ளது.
  • 9 ஓவர் – 7.3 பந்தில் கோலி ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 8.4 பந்தில் படிகள் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 9 ஓவர் முடிவில் பெங்களூர் அணியின் கோலி மற்றும் படிக்கல் இணைந்து ரன்களை எடுத்துள்ளனர். சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபியின் அதிகபட்ச தொடக்க நிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 7 ஓவர் – 6.2 பந்தில் படிக்கல் ஜடேஜா எறிந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியுள்ளார். 7 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 61/0 ரன்களை எடுத்துள்ளது.
  • 5 ஓவர் – கோலி ஆரம்பம் முதல் பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து வருகிறார். 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 46/0 ரன்களை எடுத்துள்ளது.
  • 1 ஓவர்– முதலில் பெங்களூர் அணியின் கோலி மற்றும் படிக்கல் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர். 2 வது ஓவரில் கோலி மற்றும் படிக்கல் தலா ஒரு பவுண்டரி அடித்துள்ளனர். ( 13/ 0 )
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!