‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையான கதை – நடிகை காவியாவின் சினிமா வரலாறு!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. அவர் சினிமாவில் அறிமுகமான பயணம் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
நடிகை காவ்யா அறிவுமணி:
விஜய் டிவி சீரியல் மூலமாக மக்களிடம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர்கள் பலர். அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை காவ்யா அறிவுமணி. அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்துவின் மறைவுக்கு பின்பு அந்த ரோலில் பாரதி கண்ணம்மா அறிவு நடித்து வருகிறார். இவரின் நிஜப்பெயர் காவியா அறிவுமணி. அதனால் தனது முதல் சீரியலிலேயே (பாரதி கண்ணம்மா) சொந்த பெயரில் நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இவரே பொருத்தமாக இருந்தார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விலகியதும் சோகமாக இருக்கும் கண்ணன் – கலாய்க்கும் ரசிகர்கள்!
இவரின் ரோல் மாடல் நயன்தாரா மேடம் தானாம். அதனால் தான் சினிமாவிற்கு வர ஆசைபட்டாராம். இவருடைய சொந்த ஊர் சென்னை, இவர் ஆர்க்கிடெக்ட் படித்திருக்கிறார். ஆனால் இவர் சினிமா மீது கொண்ட ஆசையால் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். நயன்தாராவை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை போலவே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனது கெரியரை தொடங்கினார். அதிலும் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டுள்ளார். முதலில் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நல்ல பெயரை வாங்கி தந்தது. அப்போது தான் தளபதி விஜயின் பிகில் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சீரியல் நடிகரை மணம் முடிக்கும் சன் டிவி நடிகை – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
அந்த நேரம் பார்த்து பாரதி கண்ணம்மா சூட்டிங்கில் இருந்தும் அழைப்பு வர இதுவா? அதுவா? என யோசித்தவர், சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தினம் தினம் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணதை நினைச்சி காவியா ஃபீல் செய்து வருகிறாராம். சீரியலுக்கு முன்பு காவ்யா நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்துள்ளார். விஜே சித்து மறைவிற்கு பின்னர் இயக்குனர் நம்பிக்கையை கெடுக்காமல் பொருத்தமாக அந்த சீரியலில் அவர் நடித்து வருகிறார்.