JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.67,700/- ஊதியத்தில் வேலை – 121 காலிப்பணியிடங்கள்
புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Senior Resident பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 121 |
கடைசி தேதி | 20.07.2021 – 09.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு :
Senior Resident பணிக்கு என பல்வேறு பிரிவுகளின் 121 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Resident வயது வரம்பு :
பதிவு செய்வோர் 31.08.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
TN Job “FB Group” Join Now
JIPMER கல்வித்தகுதி :
அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MD/ MS/ DNB/ MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Senior Resident தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Computer Based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு தேர்வுகள் வரும் 21.08.2021 அன்று நடைபெற உள்ளது.
JIPMER விண்ணப்பக் கட்டணம் :
- General (UR)/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
- SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.1,200/-
- PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 20.07.2021 அன்று முதல் 09.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.