முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 17

1

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 17

 உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகுதலைஎதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக , பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அனைத்து தரங்களுடனும் சிக்கல்களைத் தீர்த்தல், வலுவான சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலமே  நில சீரழிவு பிரச்சனையில்  நடுநிலை என்பது அடையமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாகும்.
  • 2019 தீம் “எதிர்காலத்தை ஒன்றாக வளர்ப்போம்”

வாஞ்சிநாதன் நினைவு தினம்

பிறப்பு: 

  • வாஞ்சிநாதன் 1886 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இந்திய தமிழ் சுதந்திர போராட்ட வீரர்.

  • இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.
  • 1911 ஜூன் 17 அன்று வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.
  • முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.

இறப்பு: 

  • ஜூன் 17, 1911 அன்று இறந்தார்.

லியாண்டர் பயஸ் பிறந்த தினம்

  • லியாண்டர் பயஸ் ஜூன் 17, 1973 அன்று பிறந்தார்.
  • புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார்.

சிறப்புகள் :

  • இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர்.
  • இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார்.
  • 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர்.
  • இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.
  • 2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஹாய்
    அனைவரும் தனி தனியா நீவாரணம்
    கொடுத்த யானை குள்ள பானை என்ற வடிவேலு காமெடி போல் அப்படி சைய்தால் ரேஷன் கடையில்
    மானியம் நிறுத்தி விடுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!