கேரள முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் – இன்று பதவியேற்பு!!
கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சியின் தலைவர் பினராயி விஜயன் முதலமைச்சராக இன்று (மே 20) பொறுப்பேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து 20 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.
பதவியேற்பு:
கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் அதிகபட்ச இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன், இரண்டாவது முறையாக கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் தேர்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் புதிய சட்டப்பேரவைக்கான பதவியேற்பு விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
இதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்று கொண்டனர். கேரள புதிய அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முந்தைய சட்டபேரவை ஆட்சியில் முதல்வர் பினராயி விஜயனின் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமையின் கீழ் 2 பெண்களும், ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் அமைச்சரவையின் கீழ் 1 பெண் அமைச்சரும் பதவி வகித்தனர்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தற்போது பினராயி விஜயன் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள பிந்து என்பவர், கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர். இவர் திரிச்சூரின் முதல் பெண் மேயரும் கூட. மேலும் கேரள ஊடகவியலாளராக பணியில் இருந்த வீணா ஜார்ஜ், முன்னாள் தடகள வீராங்கனை சின்சு ராணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.