2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!

0
2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு - ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!
2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு - ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!
2022ம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு – ஆய்வில் தகவல்! முழு விவரம் இதோ!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022ம் ஆண்டில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு 9.9% என்ற விகிதத்தில் சம்பள உயர்வு ஏற்பட இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் ஊழியர்களின் சம்பளம் இந்த ஆண்டில் 9.9% என்ற விகிதத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், சம்பளம் பெறும் வகுப்பினருக்கு மிக உயர்ந்த அதிகரிப்புகள் ஏற்படலாம் என்று Aon India நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சம்பளத்தில் இருந்து 9.2% உயர்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் விகிதம் அதாவது அட்ரிஷன் எண்ணிக்கை 2021 இல் 21% ஆக இருந்தது.

Jio பயனர்களுக்கு 25 GB டேட்டா வழங்கும் புதிய திட்டம் – தினசரி லிமிட் இல்லை! முழு விபரம் இதோ!

இந்த கணக்கெடுப்பின்படி ஒப்பிடுகையில் கடந்த 2020ம் ஆண்டு அட்ரிஷன் விகிதம் 12.8% ஆக இருந்தது. இப்போது உலகளவில், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் மெக்கின்சியின் கூற்று தகவல் அளித்துள்ளது. இது பெரும் அட்ரிஷன் விகிதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் பல நிறுவனங்கள், ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அல்லது நிதிச்சலுகைகளை வழங்குவதன் மூலம் இதை சரிசெய்து வருகிறது.

இப்போது 2022ம் ஆண்டில் இ-காமர்ஸ் மற்றும் IT துறைகள் அதிகளவு சம்பள உயர்வைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த Aon Indiaன் சமீபத்திய ஆய்வு, 40க்கும் மேற்பட்ட தொழில்களில் இருந்து 1,500 நிறுவனங்களின் தரவை அளவிட்டு சம்பள உயர்வு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, இ-காமர்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகிய துறைகள் அதிக சம்பள உயர்வை காணும் துறைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ல் மின் வணிகத் துறை 12.4% ஆக சம்பள உயர்வை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – சூப்பரான திட்டம்!

அதே சமயம் ஹைடெக் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சராசரியாக 11.6% உயர்வைக் காணும் என தெரிகிறது. இப்போது, 2022ம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் தாக்கம் இருந்தபோதிலும், BRIC (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) நாடுகளில், இந்தியாவில் சம்பள உயர்வுக்கான கண்ணோட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி, பிரேசில் 5% சம்பள உயர்வைக் காணும். அதே வேளையில் ரஷ்யா மற்றும் சீனாவில் 6.1% மற்றும் 6.0% என்ற அளவில் சம்பள அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், நேர்மறையான வணிக உணர்வு இருப்பதாகவும் Capital Solutionsன் பங்குதாரரான ரூபாங்க் சவுத்ரி கூறியுள்ளார். மேலும் தொற்றுநோயின் முதல் அலையின் போது சிரமப்பட்ட துறைகளான சில்லறை விற்பனை, தளவாடங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை நவீன வர்த்தகம், டிஜிட்டல் சேனல்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மீண்டும் முன்னேறியுள்ளன. இது 8 சதவிகிதம் மற்றும் அதற்கு மேற்பட்ட சம்பள உயர்வுகளில் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here