நடப்பு நிகழ்வுகள் – 9 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 9 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 9 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 9 செப்டம்பர் 2023

 

தேசிய செய்திகள்

கதி சக்தி விஸ்வவித்யாலயா வதோதரா மற்றும் ஏர்பஸ் நிறுவனம் இடையே மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • தேசிய தலைநகரமான புதுதில்லியில் ஏர்பஸ் நிறுவனம் மற்றும் வதோதராவின் கதி சக்தி விஸ்வவித்யாலயா(GSV) இடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் செப்டம்பர் 07 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வழக்கமான மாணவர்கள், துறை சார்ந்த திறன், படிப்புகள் மற்றும்  பணிபுரியும் நிபுணர்களுக்கான திட்டங்கள், தொழில் அனுபவம் மற்றும் ஆசிரியர்களுக்கான கூட்டு ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, கல்லூரி மற்றும் பள்ளிகளின் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக்  கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

18வது ஜி20 உச்சி மாநாடானது புதுதில்லியில் இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது.

  • 2023 ஆம் ஆண்டிற்கான மற்றும் 18ஆவது ஜி-20 உச்சி மாநாட்டை செப்டம்பர் 09 அன்று இந்திய தலைநகரமான புது தில்லியில் இந்தியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மாநாடானது பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
  • இங்கிலாந்து பிரதமர், ஜப்பான் பிரதமர், அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் உட்பட உலக வங்கி தலைவர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது இந்திய தரத்தை உலக அரங்கிற்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் –  NDMC அமைத்தல்

  • இந்தியாவின் G-20 உச்சி மாநாட்டைக் கருத்தில் கொண்டு மேற்காண் கூடுதல் விழிப்புடன் இருக்க தேசிய தலைநகரமான புதுதில்லி நகராட்சி ஆணயமானது, NDMC அமைப்பினால் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இயந்திர சாலை துப்புரவு வாகனங்கள், தெரு விளக்குகள், குப்பை அகற்றுதல், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து இயக்கம், சுற்றுச்சூழல் சென்சார்கள் ஆகியவற்றை NDMCயால் அமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டு மையமானது கண்காணித்து தகவல் வெளியீடுகளை வழங்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக Avaada குழுமமானது TSSEZL உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

  • டாடா ஸ்டீல் சிறப்பு பொருளாதார மண்டலம் (TSSEZL) மற்றும் அவாடா குழுமம் இடையே ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் தொழில் பூங்கா, கஞ்சம் மாவட்டத்தில் அம்மோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி அலகு நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தமானது(MoU)  மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவாடா குழுமம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1,600 நேரடி மற்றும் 4,000 மறைமுக வேலைகளை உருவாக்குதல் மற்றும் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன்கள் CO2 உமிழ்வைக் குறைத்தல் மற்றும் இந்தியாவை உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

சர்வதேச செய்திகள்

இந்தியா மற்றும் ஆசியான் பல்வேறு மேம்பாட்டுக்களுக்கான விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • அமைதி, நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஆகிய பகிரப்பட்ட செழுமைக்கான இந்தியா மற்றும் ஆசியான் அமைப்புடனான மேம்பாட்டு கூட்டாண்மையை செயல்படுத்துவதற்கான மற்றும் நடைமுறைச் செயலாக்கத்தின் மூலம் உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பின் உறுப்பினர் நாடுகளான 10 நாடுகளும் இணைந்து செப்டம்பர் 07 2023 அன்று மேற்கொண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவு ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இந்தோ-பசிபிக் இடையிலான பகுதிகளில் தங்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டாண்மை ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாலியின் மிலனில் நடைபெறும் ‘வடகிழக்கு இந்திய விழாவில்’ மிசோரம் பங்கேற்கிறது.

  • செப்டம்பர் 9 2023 அன்று இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரத்தில் நடைபெறும் சிறப்பு ‘வடகிழக்கு இந்திய விழாவில்’ இந்தியாவின் மிசோரம் ‘சென்ஹ்ரி நாட்டுப்புற மற்றும் கலாச்சார குழு’ ஆனது பங்கேற்க உள்ளதாக சென்ஹ்ரி அமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த விழாவானது மிசோரம் மாநிலத்தின் வளமான மற்றும் துடிப்பான பாரம்பரியங்கள்,  கலாச்சாரம் மற்றும் இசையை இந்த குழுவானது வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் வடகிழக்கு திருவிழாவில் பங்கேற்கும் ஒரே கலாச்சாரக் குழு மிசோரம் குழு என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிலன் இத்தாலி மற்றும் நார்த் ஈஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NEIFT) மற்றும் இந்தியத் தூதரகம் ஆகியவற்றால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகும்.

மாநில செய்திகள்

“பாதுகாப்பான நகரம்” என்ற முக்கிய திட்டம் விரைவில் ஹரியானாவில் தொடங்கப்படும்.

  • ஹரியானா மாநிலத்தில் விரைவில் “பாதுகாப்பான நகரம்” என்ற திட்டமானது தொடங்கப்படும் என அம்மாநில காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சத்ருஜீத் கபூர் அறிவித்துள்ளார்.
  • இது மாநிலத்தின் பெண்கள் மத்தியில் மிகுந்த பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என்றும் இந்த திட்டமானது அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களான ரோஹ்தக் மற்றும் குருகிராமில் தொடங்கப்படும் என்றும் அதன் பின் மாநிலம் முழுமைக்கும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை பராமரிப்பதில் இந்த திட்டமானது முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டீவர்ட் நியமனம்.

  • உலகின் மிகப் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஆடை விற்பனையாளரான எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டீவர்ட் க்ளெண்டினிங்கை என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் செப்டம்பர் 15 முதல் இந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர் முந்தைய டிம் பாக்ஸ்டருக்குப் பின் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுபம் ரசயன் இந்தியா(Anupam Rasayan India)நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக கோபால் அகர்வால் நியமனம்.

  • நாட்டின் சிறப்புமிக்க வேதியியல் மற்றும் இரசாயனங்கள் உற்பத்தித் துறையில் முன்னணி சேவை வழங்குனரான அனுபம் ரசயன் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) கோபால் அகர்வால் அவர்களை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் இந்த பொறுப்பில் செப்டம்பர் 11, 2023 முதல் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிறுவன இயக்குநர்கள் குழு செப்டம்பர் 7, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தின் இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான  ‘பேட்டிங் ஃபார் வாட்டர்’ என்ற முக்கிய முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.

  • தண்ணீர் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பானது  2023 ஆம் ஆண்டிற்கான ‘பேட்டிங் ஃபார் வாட்டர்’ என்ற தனது முக்கிய முதன்மை பிரச்சாரத்தினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குடிநீரை முழுமையாக அணுகுவதை உறுதிசெய்யும் முயற்சியில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நோக்கமாக கொண்டு இந்த பிரச்சாரமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் போதுமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.

கோடக் மஹிந்திரா வங்கியின் இடைக்கால நிர்வாக இயக்குனராக தீபக் குப்தா நியமனம் செய்வதற்காக RBI ஒப்புதல் அளித்துள்ளது. 

  • இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியானது இரண்டு மாதங்களுக்கான இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக தீபக் குப்தா என்பவரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தியாவின் கோடக் மஹிந்திரா வங்கி செப்டம்பர் 08 2023 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பபிட்டுள்ளது.
  • இந்த சமீபத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு பிறகு குப்தாவின் நியமனம் அமலுக்கு  வந்துள்ளது. கோடக் மஹிந்திராவை நிறுவி வழிநடத்திய மற்றும் முந்திய தலைமை நிர்வாக அதிகாரியான உதய் கோடக் அவர்களின் பான் நியமனத்திற்கு பிறகு இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எண்டோர்பின்ஸ் என்டர்டெயின்மென்ட் நிர்வாக இயக்குநராகவும் COO ஆகவும் அஹ்மத் ஃபராஸ் நியமனம்.

  • உலகின் முன்னணி உள்ளடக்கம்-தலைமையிலான விளம்பரம் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பாளரான, எண்டோர்ஃபின்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனராகவும் அதன் தலைமை இயக்க அதிகாரியாகவும் அஹ்மத் ஃபராஸ் என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • மேலும் இவர் இந்தியா சார்ந்த பிராந்திய பகுதி மற்றும் உலகளாவிய நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவன MD & CEO ஆக விவேக் குப்தா நியமனம்.

  • உலகளவில் புகழ்பெற்ற ஹெய்னெகன் நிறுவனத்தின் ஒரு அங்கம் அல்லது துணை வழங்குனரான யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனமானது(UBL) அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விவேக் குப்தா என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த நியமனமானது செப்டம்பர் 25 முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது. இவர் UBL அமைப்பின் தலைமைக் குழுவுடன் சேர்ந்து, நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு பொறுப்பாக இருப்பார் எனவும் விளம்பரப்படுத்துதல் மற்றும் பல்வேறு நிர்வாக பிரிவிற்கு தலைமை தாங்குவார் என்று UBL நிறுவனம் செப்டம்பர் 07 2023 அன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!