அஞ்சலகத்தில் ஐந்தே ஆண்டுகளில் ரூ.9 லட்சம் வரை சேமிப்பு – A டூ Z விபரங்கள் இதோ!

0
அஞ்சலகத்தில் ஐந்தே ஆண்டுகளில் ரூ.9 லட்சம் வரை சேமிப்பு - A டூ Z விபரங்கள் இதோ!
அஞ்சலகத்தில் ஐந்தே ஆண்டுகளில் ரூ.9 லட்சம் வரை சேமிப்பு - A டூ Z விபரங்கள் இதோ!
அஞ்சலகத்தில் ஐந்தே ஆண்டுகளில் ரூ.9 லட்சம் வரை சேமிப்பு – A டூ Z விபரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மாதாந்திர வருமானத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் போன்ற பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மாதாந்திர வருமானத் திட்டம்

கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் நெருக்கடி நிலையை சரி செய்ய பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். அதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டத்தில் பெருமளவு முதலீடுகளை செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கியை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் குறைவான நாட்களில் அதிக வட்டி தொகை கிடைக்கிறது. அத்துடன் பணத்திற்கு அதிக பாதுகாப்பும் கிடைக்கிறது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

அஞ்சல் அலுவலகத்தில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமானத் திட்டம், 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு, தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு , மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பென்சன் திட்டங்கள் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள் மூலமாக அதிக லாபங்களை பெற முடிகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் மாதாந்திர வருமானத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதில் குறைந்தபட்ச தொகையாக 1500 ரூபாய் முதல் செலுத்தி கொள்ளலாம் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பெருமளவு இத்திட்டத்தில் இணைகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புகைப்படப் போட்டி!

மேலும் இதில் தனிநபர் கணக்கில் அதிகபட்ச தொகையாக ரூ.4.5 லட்சமும் மற்றும் கூட்டு கணக்கில் அதிகபட்ச தொகையாக ரூ.9 லட்சமும் சேமித்து கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 6.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் வட்டி தொகையை எடுக்கவில்லை என்றால் மேலும் கூடுதல் வட்டி தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும் இது தொடர்பான தகவல்களை இந்திய தபால் துறையின் இணையதள பக்கத்தின் மூலமாகவோ அல்லது தபால் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!