சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!

0
சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் இதோ!
சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் இதோ!
சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!

சென்னை மாநகராட்சியில் மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கீழ்வரும் 89 பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வரும் 89 பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ அலுவலர் – DTC – 02, மருத்துவ அலுவலர் – Medical College – 03, மருத்துவ அலுவலர் – DRTB – 01 ஆகிய பணிகளுக்கு மாதம் ரூ.45,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மற்றும் தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!

மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர் – 02 பணிக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படுகிறது. எம்பிஏ மற்றும் சுகாதார நிர்வாகவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட DRTB/HIV TB ஒருங்கிணைப்பாளர் – 01 பணிக்கு மாதம் ரூ.19,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அறிவியல் பிரிவில் பட்டம், 2 மாத கணினி சான்றிதழ் மற்றும் நிரந்த இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் – 03 பணிக்கு மாதம் ரூ.19,000 ஊதியம் வழங்கப்படுகிறது. எம்எஸ்டபுள்யு, உளவியல் பிரிவில் எம்.எஸ்சி., தொடர்புதுறையில் ஒரு ஆண்டு களப் பணி அனுபவம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்(STS) – 03 பணிக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படுகிறது. 10, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம், குறைந்தபட்சம் சுகாதா துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், இரண்டு மாத கணினி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) – 02 பணிக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படுகிறது. 10, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கீகரிப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், நிரந்த இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ், சுகாதாரத்துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மருந்தாளுநர் – 03 பணிக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படுகிறது. பி.பார்ம், டி.பார்ம் முடித்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருந்து கிடங்கு அல்லது சுகாதார மையத்தில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் – 58 பணிக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கீகரித்த மருத்துவ தொழில்நுட்ப பட்டம் மற்றும் 2 மாத கணினி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TB சுகாதாரப் பார்வையாளர் – 05 பணிக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது.அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது சுகாதாரப்பணியாளராக பணியாற்றிய அனுபவம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கணினி இயக்குபவர் – 01 பணிக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது. 10, பிளஸ் 2, அரசு அங்கீகரிக்கப்பட்ட கணினி பட்டம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்!

ஆற்றுபடுத்துநர் – DRTB மையம் – 04 பணிக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது. சமூகப் பணி, சமூகவியல் உளவியல் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கணக்காளர் – 01 பணிக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படுகிறது. வணிகவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், கணக்கியல் மென்பொருளியலில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நேர்முக தேர்வு நடைபெறும் நாள் தேதி முதலிய விவரங்கள் தாவால் மூலம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ம்,மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து திட்ட அலுவலர் -திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 29.11.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பெறப்படாது என ஏற்றுக்கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!