தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!

0
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் - கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் - கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார்.

அம்மா மருந்தகங்கள்:

தமிழகத்தில் கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் , என்று பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் அம்மா உணவகம், அம்மா மருந்தங்கள் போன்ற திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் ஒரு நாளைக்கு மூன்று வேலையும் அம்மா உணவகத்தில் உணவு உண்கின்றனர். அதே போல மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவு விலையில் அளிக்கும் நோக்கில் அம்மா மருந்தகங்கள் தொடக்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தில் 2 விருதுகளை பெற்ற தமிழகம் – அறிவிப்பு வெளியீடு!

குறைந்த விலையில் 20% தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கம் மூலம் 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களின் மாத பட்ஜெட்டில் மருந்துக்கு ஆகும் செலவு குறைகிறது. இந்த திட்டம் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள்!

இந்த நிலையில் அரசு நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்கள் முடிவு மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை அதிமுக அரசு எதிர்த்து வருகிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள அம்மா மருந்தகங்கள் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!