Jio, Airtel & Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Jio, Airtel & Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Jio, Airtel & Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Jio, Airtel & Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெரும்பாலான பயனர்கள் நீண்ட காலம் செல்லுபடியாகும் வகையில் டேட்டா மற்றும் குரல் அழைப்பு சேவைகளை பெற விரும்புகிறார்கள். இதற்காக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.

ஊரடங்கு நீக்கம், நேரடி வகுப்புகளுக்கு அனுமதி – அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்பதிவில் காணலாம். இதில் முதலாவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு ரூ.666ல் வழங்குகிறது. இந்தத் திட்டம் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS ஆகியவற்றுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

அடுத்ததாக Jioவின் ரூ.719 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டமும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது. மறுபுறம், ஜியோவின் ரூ.1,066 திட்டமானது அதே போன்ற பலன்களை வழங்குகிறது. ஆனால் இதனுடன் Disney+ Hotstar OTT தளத்திற்கான அணுகலுடன் கூடுதலாக 5GB டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, அதிக டேட்டா நன்மை வழங்கும் ரூ.1,199 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை – மாணவிகள் அணிந்து வர தடை!

தொடர்ந்து ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், 84 நாட்கள் செல்லுபடியாகும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இதில் முதல் திட்டம் 1.5ஜிபி உடன் ரூ.719 விலையில் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 SMS உடன் மொபைல் பதிப்பான Amazon Prime வீடியோவின் இலவச சோதனை மற்றும் Wynk இசை போன்ற சில நன்மைகளுடன் வருகிறது. அடுத்ததாக ஏர்டெல் வழங்கும் 2ஜிபி ரூ.839 விலையில் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS உடன் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் கொடுக்கப்படுகிறது.

கடைசியாக ஏர்டெல் வழங்கும் ரூ.455 விலையிலான ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்திற்கு, 6ஜிபி அளவிலான டேட்டாவை வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS ஆகியவற்றுடன் வழங்குகிறது. இந்த திட்டமும் மொபைல் பதிப்பான அமேசான் பிரைம் வீடியோவின் இலவச சோதனை மற்றும் Wynk இசை போன்ற சில நன்மைகளுடன் வருகிறது. தொடர்ந்து வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.719 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு 1.5GB டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது.

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அடுத்ததாக ரூ.839 விலையில் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS உள்ளிட்ட சில கூடுதல் நன்மைகளுடன் வழங்குகிறது. மேலும் ரூ.459 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு 6ஜிபி அளவிலான டேட்டாவை வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இதனுடன் Viன் பிங் ஆல் நைட் சேவைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்புகள் ஏதுமின்றி இணைய இணைப்புடன் கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!