சென்னை GST அலுவலகத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31 கடைசி நாள்!

0
சென்னை GST அலுவலகத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - டிச.31 கடைசி நாள்!
சென்னை GST அலுவலகத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - டிச.31 கடைசி நாள்!
சென்னை GST அலுவலகத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரூ.56,000 சம்பளத்தில் சென்னை GST அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை GST அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி வெளியீடு!

இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Tax Assistant
  • காலியிடம்: 13
  • சம்பளம்: 25,500 – 81,100
  • தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Gr-II
  • காலியிடம்: 02
  • சம்பளம்: 25,500 – 81,100
  • தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதனை ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், ஹிந்தியில் 65 நிமிடத்திலும் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Havaldar
  • காலியிடம்: 03
  • சம்பளம்: 18,000 – 56,900
  • தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 157.5 செ.மீ, மார்பளவு 81 செ.மீ அகலம், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 156 செ.மீ உயரம் மற்றும் 48 கிலோ எடை இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
  • காலியிடம்: 01
  • சம்பளம்: 18,000 – 56,900
  • தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 31.12.2021 தேதியின்படி 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை வரும் டிச.31ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்ப வேண்டிய முகவரி The Additional Commissioner – CCA, GST & Central Excise, Tamilnadu & Puducherry Zone, GST Bhavan, Nungambakkam, Chennai. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!