நடப்பு நிகழ்வுகள் – 7 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 7 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 7 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 7 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான(UGC) புதிய பயிற்சித் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

 • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், செப்டம்பர் 05 2023 அன்று தேசிய தலைநகரமான புது தில்லியில் உள்ள கவுஷல் பவன் வளாகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின்(UGC) மாளவியா மிஷன் என்ற புதிய ஆசிரியர்களுக்கான சிறப்பு முன்னெடுப்பு பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
 • இந்த முன்னெடுப்பு திட்டமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிய திறன் வழிமுறைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் G20 சுற்றுலாக்கான வழிமுறை மற்றும் SDGக்கான வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 • ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்புடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் இணைந்து செப்டம்பர் 05 அன்று G20க்கான சுற்றுலா முறைப்படுத்தலுக்கான வழிமுறைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான வலைத்தளத்தை(Dashboard) அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்த அமைப்பானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும்  இது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய சுற்றுலாத் துறையில் கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக அமையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் “மருத்துவ நடைமுறையில் வளர்ந்து வரும் போக்குகள்”என்ற மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

 • பணியாளர்கள், ஓய்வூதியங்களுக்கான துறை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் செப்டம்பர் 05 2023 அன்று AFMC அமைப்புக்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (API) ஒரு பிரிவைத் தொடங்கி வைத்துள்ளார் மற்றும் அதேவேளையில் API-AFMS என்ற புதிய தொடர் மருத்துவக் கல்விக்கான(CME) “மருத்துவ நடைமுறையில் வளர்ந்து வரும் போக்குகள்” என்று பெயரிடப்பட்ட ஒரு மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.
 • முப்படையில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான சிறப்பான சேவைகளை வழங்குவதையும், உயிர்தொழிநுட்பத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரி மருத்துவ அறிவியலில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்து ஆயுதப்படை மருத்துவ அமைப்புடன் DBT அமைப்பானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 • இந்திய மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையானது(DBT) மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதப் படை மருத்துவ சேவைகளுக்கான அமைப்புடன்(AFMS) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.
 • உயிரி-தொழிநுட்பவியல் மற்றும் உயிரி-அறிவியலில் ஆராய்ச்சி ஒத்துழைப்பை உருவாக்கவும், ஆசிரிய பரிமாற்ற திட்டங்கள் மூலம் அதன் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அஞ்சல் துறை மற்றும் ஷிப்ரோக்கெட் நிறுவனமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 • நாட்டில் மின் வணிகத்திற்கான ஏற்றுமதி சூழலை உருவாக்குதல் மற்றும் அதனை மேம்படுத்துதல் மற்றும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய அஞ்சல் துறையானது, முன்னணி ஈ-காமர்ஸ் செயல்படுத்தும் தளங்களில் ஒன்றான பிக்ஃபூட் ரீடெய்ல் சொல்யூஷன்(ஷிப்ரோக்கெட்) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
 • இந்திய அஞ்சல் துறையின் விரிவான இருப்பு மற்றும் நம்பகமான கப்பல் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் இ-காமர்ஸ் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

G20 வளாகத்தில் உலகின் மிக உயரமான 28 அடி உயர நடராஜர் சிலையானது நிறுவப்பட்டுள்ளது. 

 • தேசிய தலைநகரமான புது டெல்லியில் உள்ள ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் புகழ்பெற்ற பாரத் மண்டப வளாகத்தில் 28 அடி உயர நடராஜர் சிலையானது சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 19 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • மேலும் இது உலோக வார்ப்பின் பண்டைய “இழந்த மெழுகு நுட்பத்தைப்” பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை உருவாக்கம் மற்றும் அழிக்கும் கடவுளான சிவனின் அண்ட சக்தி என்றும் அடையாளப்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு SVAMITVA என்ற மையத் துறைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

 • இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள குடிமக்கள் தங்கள் சிறு மற்றும் பெரிய அளவிலான சொத்துக்களை கடன் வாங்குவதற்கான நிதிச் சொத்தாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நிதி வலுத்தன்மையை கொண்டு வருவதற்காக கிராமப்புறங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிராமங்களின் ஆய்வு மற்றும் மேப்பிங் எனப்படும் (SVAMITVA) என்ற மையத் துறைத் திட்ட அதிகரிப்பு முன்னெடுப்பை  மத்திய அரசு செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • தகுதியான நபர்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை இந்திய அரசாங்கத்திடமிருந்து கடன்கள், பற்றுகள் மற்றும் நிதிப் பலன்கள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கதாகும்.

அமேசான் இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

 • அமேசானில் உள்ள பொருளாதார மற்றும் நிர்வாக குழுக்கள் தேவையான நிறுவன செயல்பாட்டு தளங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
 • அமேசான் நிறுவனமானது தனது செயல்பாட்டு நெட்வொர்க்கில் உள்கட்டமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்துவது மற்றும் PWD களின் திறமையை மேம்படுத்துவது, பங்கு பொருத்தத்தைக் கண்டறிவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

மத்திய அறிவியல் அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்ப துறை மற்றும் AFMS அமைப்பானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 • அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும் அதன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்  உயிரித்தொழில்நுட்ப துறை, அறிவியல் மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS), மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே செப்டம்பர் 05 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MOU) மேற்கொண்டுள்ளது.
 • இந்த ஒப்பந்தமானது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் ஆசிரியப் பரிமாற்ற நிகழ்வுகள் மூலம் நாட்டின் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹிட்டாச்சி நிதி சேவை வழங்குநர் அமைப்பானது “இந்தியாவின் முதல்’ UPI-ATM”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

 • வணிக செலுத்துதல் மற்றும் பணத்தீர்வுகள் வழங்குநரான ஹிட்டாச்சி நிதிசேவை நிறுவனமானது, பாதுகாப்பான, வங்கி அட்டை இல்லாத பணத்தை வழங்கும் இந்திய அரசாங்கத்தின் தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து ‘நாட்டின் முதல் வெள்ளை முத்திரை ATM (WLA)’ மும்பையில் அறிமுகப்படுத்தியுளளது.
 • வங்கி அட்டைகளின் தேவையை நீக்குவதன் மூலம் வாடிக்கையாளர் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஹிட்டாச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

ஜெருசலேமில் வெளிநாட்டு தூதரகத்தை திறந்த ஐந்தாவது நாடு பப்புவா நியூ கினியா என்றாகிறது.

 • பப்புவா நியூ கினியா நாட்டு அரசாங்கமானது தனது தூதரகத்தை செப்டம்பர் 05 2023 அன்று அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேமில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் ஜெருசலேமில் வெளிநாட்டு தூதரகத்தை நிறுவிய ஐந்தாவது நாடு ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு என்ற பெருமையும் அடைந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மாநில செய்திகள்

நாட்டின் முதல் சோலார் நகரம் சாஞ்சியில் திறக்கப்பட்டுள்ளது.

 • மத்திய பிரதேச மாநிலத்தில் நாட்டின் முதல் சோலார் நகரமான சாஞ்சியை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செப்டம்பர் 06 2023 அன்று திறந்து வைத்துள்ளார்.
 • சாஞ்சி சோலார் சிட்டியில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 747 டன் அளவுள்ள கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமானது குறைக்கப்படுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வளர்ந்த மரங்களுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதில் அரசு மற்றும் குடிமக்களின் எரிசக்தி தொடர்பான செலவினங்களில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நியமனங்கள்

பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆஷிஷ் ஷா நியமனம்.

 • பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அம்பரீஷ் மூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ஆஷிஷ் ஷா அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • 2012 ஆம் ஆண்டு மூர்த்தியுடன் இணைந்து இந்த நிறுவனத்தை நிறுவிய ஷா, இந்த தற்போதைய புதிய பணி தொடங்குவதற்கு முன்பு நிறுவனத்தின் COO பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய ரயில்வே துறையின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக சுந்தர் குப்தா பொறுப்பேற்பு.

 • மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மத்திய ரயில்வே பிரிவின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஷியாம் சுந்தர் குப்தா செப்டம்பர் 05 2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என மத்திய ரயில்வே பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மேலும் இவர் ஆகஸ்ட் 31, 2023 அன்று இதற்கு முன்னதாக தலைமை இயக்க மேலாளராக இருந்த திரு. முகுல் ஜெயின் ஓய்வுபெற்றதை தொடர்ந்து இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

ஷோகுவியில் அமைந்துள்ள அசாம் ரைபிள்ஸ் பயிற்சி மையத்திற்கு சிறந்த கல்வி பயிற்சி நிறுவனம் என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.

 • நாகாலாந்து மாநிலத்தின் ஷோகுவியில் அமைந்துள்ள அசாம் ரைபிள்ஸ் பயிற்சி மையத்திற்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்வி-பயிற்சி நிறுவனத்திற்கான மத்திய உள்துறை அமைச்சர் கோப்பையானது வழங்கப்பட்டுள்ளது. 
 • இந்த விருதினை பிரிக் சுரேஷ் குமார் ஷியோரன் செப்டம்பர் 05 2023 அன்று புது தில்லியில் நடைபெற்ற 53வது நிறுவன தினத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகமானது நாட்டின் பல்வேறு மத்திய காவல் பயிற்சி நிறுவனங்களின் தேசிய அளவிலான பகுப்பாய்வு மற்றும் கணக்கெடுப்பை நடத்தி விருதிற்கான தகுதியை தேர்வு செய்கின்றன என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

‘கிராப் தி புல் பை தி ஹார்ன்ஸ்’ என்ற தலைப்பிடப்பட்ட வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜாக் படமானது விருதினை வென்றுள்ளது.

 • 2023 ஆம் ஆண்டிற்கான பறவை மற்றும் விலங்குகளுக்கான புகைப்படக் கலைஞர் போட்டியின் ஒட்டுமொத்த பிரிவிற்கான வெற்றியாளராக ‘கிராப் தி புல் பை தி ஹார்ன்ஸ்’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜாக் ஜியின் படமானது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 • ஒரு பெண் பருந்து ஒரு பழுப்பு நிற பெலிகன் மீது அதிக வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் தாக்குவதாக கொண்ட இந்த புகைப்படமானது விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விருதுடன் இவர் Zhi £5,000 இன் வெற்றி பரிசையும் பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான மானவ்தா சன்மான் விருதானது குருநானக் ஆவணப்படங்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 • 2023 ஆம் ஆண்டிற்கான மனிதநேயத்திற்கான மரியாதை விருதாக கருதப்படும் மானவ்தா சன்மான் விருதானது அகில இந்திய பிங்கல்வாரா அறக்கட்டளைச் சங்கத்தால் செப்டம்பர் 05 2023 அன்று குரு நானக் ஆவணப்படங்கள் தயாரிப்பாளர்களான அமர்தீப் சிங் மற்றும் வினிந்தர் கவுர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • அகில இந்திய பிங்கல்வாரா அறக்கட்டளை அமைப்பானது பஞ்சாபில்  1924 ஆம் ஆண்டில் பகத் பூரான் சிங் என்று அறியப்பட்ட 19 வயதான ராம்ஜி தாஸ் என்பவரால் ஆதரவற்றவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய தினம்

பிரேசில் சுதந்திர தினம்

 • காலனி ஆதிக்க போர்ச்சுகலில் இருந்து பிரேசில் சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில், அவ்விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி மதிப்பளிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 அன்று பிரேசில் சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது.
 • பிரேசில் நாடானது செப்டம்பர் 7 1822 அன்று சுதந்திரம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகளவில் பரப்பளவில் ஐந்தாவது பெரிய நாடு மற்றும் ஏழாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு பிரேசில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!