Pro Kabaddi League 2021 – தமிழ் தலைவாஸ் அணியில் 7 புதிய வீரர்கள் அறிமுகம்!
இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் (PKL) போட்டிகளில், வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 7 புது முகங்களுடன் சில முன்னணி வீரர்களையும் கோடி கணக்கில் தொகை செலுத்தி ஏலத்தில் பெற்றுள்ளது.
கபடி லீக்
இந்தியாவின் தொழில்முறை அளவிலான கபடி போட்டிகள் புரோ கபடி லீக் (PKL) என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் சீசனில் 8 அணிகள் மட்டுமே கலந்து கொண்டது. இதை தொடர்ந்து 2017 மற்றும் 2018 – 19 ஆம் சீசனுக்காக, புரோ கபடி லீக்கில் நான்கு புதிய அணிகள் சேர்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று வருகிறது. பெங்கால் வாரியர்ஸ் அணி இந்த போட்டியின் நடப்பு சாம்பியனாக உள்ளது.
IPL 2021 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
மேலும் பாட்னா பைரேட்ஸ் அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள புரோ கபடி லீக் போட்டிகளுக்கான அணி வீரர்களது ஏலம் நேற்று (ஆகஸ்ட் 31) மும்பையில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 7 புதிய வீரர்களை வாங்கியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் ரூ. 2.38 கோடி செலவில் மன்ஜீத் (ரூ.92 லட்சம்), பிரபஞ்சன் (ரூ .71 லட்சம்), சுர்ஜீத் (ரூ.75 லட்சம்) உள்ளிட்ட 3 வீரர்களை தமிழ் தலைவாஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் B பிரிவு வீரர் MS அதுல் ரூ.30 கோடி, C பிரிவு ரைடர் அஜிங்க்யா பவார் ரூ .19.5 லட்சத்திற்கும், C பிரிவு ஆல் ரவுண்டர் சவுரப் படீல் ரூ.15 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனுடன் C பிரிவு ஆல் ரவுண்டர்களான சந்தபனசெல்வம், சாகர் கிருஷ்ணா மற்றும் C பிரிவு டிபெண்டர் சாஹில், C பிரிவு ரைடர் பவானி ராஜ்புத் ஆகியோரையும் சுமார் 10 லட்சம் கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி பெற்றுள்ளது.