நடப்பு நிகழ்வுகள் – 6 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 6 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 6 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 6 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

இந்திய குடியரசு தலைவர் “நூலகங்களின் திருவிழா 2023” ஐத் தொடங்கி வைத்துள்ளார்.

  • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய தலைநகரமான புதுதில்லியில் உள்ள மாபெரும் பிரகதி மைதானத்தில் “நூலகங்களின் திருவிழா 2023“ஐ  தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த திருவிழாவானது கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு நாள் நடைபெற உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் மைய நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும்  நவீனமயமாக்கல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.

நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது GOI மற்றும் நேபாள அரசாங்கத்திற்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நேபாளத்தில் சிறந்த கல்வி வசதிகள் மேற்கொள்ளுதல், தண்ணீர் மேலாண்மை வசதிகள் மற்றும் நாட்டின் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக நேபாளத்தில் நான்கு உயர் தாக்க சமூக மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை (HICDPs) மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoUs) நேபாள தலைநகரான காத்மாண்டுவில் உள்ள இந்தியத் உயர் ஆணையமும் நேபாள அரசாங்கமும் ஆகஸ்ட் 04 2023 அன்று கையெழுத்திட்டுள்ளன.
  • இதன்படி நேபாளத்தின் சுதுர்பாசிமில் உள்ள டார்ச்சுலா மாவட்டத்தில் இரண்டு பள்ளி கட்டிடங்களும் கோஷியின் சங்குவாசபா மாவட்டத்தில் ஒரு பள்ளி மற்றும் உதயபூர் மாவட்டத்தில் சுகாதாரத் திட்டத்தின் கட்டுமானமானது திரியுகா நகராட்சியின் அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு “மகாரத்னா அந்தஸ்து” வழங்கப்படுகிறது.

  • ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை ‘மஹாரத்னா’ என்ற உயர் வகைக்கு மேம்படுத்த மத்திய நிதி அமைச்சகமானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்நிறுவனம் இந்த உயர் வகைக்கு மேம்படுத்தப்பட்ட பிறகு, “இந்தியாவின் 13வது மகாரத்னா மத்திய பொதுத்துறை” உயர் நிறுவனமாக (CPSE) உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அமைப்பின் (CRCS) வலைத்தளத்தை தொடங்குகிறார்.

  • மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, ஆகஸ்ட் 06 அன்று மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் (CRCS) அமைப்பின் வலைத்தளத்தை தொடங்குகிறார்.
  • சம்ரிதி முன்னெடுப்பானது, நாட்டில் மத்திய கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகம் பல முயற்சிகளை எடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக கூட்டுறவுத் துறையில் எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கவும் மத்திய கூட்டுறவு துறை கணினிமயமாக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டு இந்த வலைத்தளமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுப்பதற்கான புதிய ஆணையத்தை பாகிஸ்தான் அமைக்க உள்ளது.

  • பாகிஸ்தானின் நாடாளுமன்றமானது ஆகஸ்ட் 04 அன்று பணமோசடி ஈடுபடுதலை தடுத்தல் மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுத்தல் ஆகியவற்றிற்காக புதிய அதிகார ஆணையத்தை அமைப்பதற்கான தீர்மான மசோதிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது பாகிஸ்தான் நாடு மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) “சாம்பல் பட்டியலில்”(Gray List) இடம் பெறாமல் இருப்பதை நோக்கமாக கொண்டு இந்த ஆணையமானது அமைய உள்ளது என அந்நாட்டு நிர்வாகமானது தெரிவித்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் நாடானது FATF அமைப்பின் கருப்பு பட்டியலில் சில காலங்கள் வைக்கப்பட்டிருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

தமிழக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதியமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

  • தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் எனும் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச அருங்காட்சியகத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 05 2023 அன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • இந்த ASI யின் அருங்காட்சியகமானது ஆதிச்சநல்லூரில் உள்ள “ஆன்-சைட்” அருங்காட்சியகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகும். இந்தியா முழுவதும் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச அருங்காட்சியகங்களை நிறுவுவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக 2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக ஆதிச்சநல்லூரில் உள்ள அருங்காட்சியகம் அமைந்துள்ளது என்பது குறிப்பித்தக்கதாகும்.

ராஜஸ்தான் மாநில அரசாங்கமானது 19 புதிய மாவட்டங்களை உருவாக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

  • ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 19 புதிய மாவட்டங்கள் மற்றும் மூன்று புதிய மண்டல பிரிவுகளை உருவாக்குவதற்கான மத்திய உயர்மட்டக் குழுவின் முன்மொழிவுக்கு அம்மாநில அமைச்சரவையானது ஆகஸ்ட் 04 2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதலின் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இனி 50 மாவட்டங்கள் இருக்கும் என்று அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அபர்ணா அரோரா தெரிவித்துள்ளார். நிர்வாக ஈடுபாடுகளுக்காக இந்த பிரிவானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஹனிவெல் நிறுவனத்தின் உயர் வளர்ச்சிப் பிரிவுகளின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனந்த் மகேஸ்வரி நியமனம்.

  • மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி, அமெரிக்க நிறுவனமான ஹனிவெல்லின் உயர்-வளர்ச்சி பிராந்திய பிரிவு முகமைக்கு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஆகஸ்ட் 4, 2023 அன்று அறிவித்துள்ளது.
  • இந்த நியமனத்தின் மூலம் இவர் செப்டம்பர் 4, 2023 லிருந்து தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஹனிவெல் தலைமை நிர்வாக அதிகாரியான விமல் கபூரிடம் தனது மேம்பாட்டு அறிக்கையை சமர்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DERC-யின் இடைக்கால தலைவராக நீதிபதி ஜெயந்த் நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய அமைப்பின்(DERC) இடைக்காலத் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஜெயந்த் நாத் அவர்களை நியமித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 04 அன்று உத்தரவு ஆணையை வெளியிட்டுள்ளது.
  • முன்னதாக, ஜூலை 20 அன்று, எல்ஜி மற்றும் டெல்லி அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு யார் தலைமை தாங்குவது என்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படாமையால் தற்காலிக DERC தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இஸ்ரோ மிகப்பெரிய செயற்கைக்கோள் தொழில்நுட்ப நுணுக்கத்தை  தனியாருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது(இஸ்ரோ) அதன் அதிநவீன IMS-1 செயற்கைக்கோள் ஊர்தி தொழில்நுட்பத்தை ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப பரிமாற்றம்(technology transfer) மூலம் மாற்றியுள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இஸ்ரோவின் முக்கிய வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா அமைப்பு (என்எஸ்ஐஎல்) மூலம், தனியார் விண்வெளித் துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக இந்த பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

132வது துராண்ட் கோப்பை தொடரானது அசாம் மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

  • 132வது துராண்ட் கோப்பை தொடரானது மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 05 அன்று அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள SAI மைதானத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • அசாம் மாநில அரசாங்கம் மற்றும் போடோ பிராந்திய கூட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவம் இணைந்து இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கூட்டு அணியானது தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

  • ஆகஸ்ட் 04 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பர்னீத் கவுர், ஜோதி சுரேகா வென்னம் மற்றும் அதிதி சுவாமி அடங்கிய இந்திய மகளிர் கூட்டு அணியானது மெக்சிகோ நாட்டின் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 
  • இந்த இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணியை இந்திய அணியானது 235-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1981ல் இத்தாலியில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முதல்முறையாக அறிமுகமான பிறகு, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது இதுவே முதல் முறை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான 20 கிமீ பெண்களுக்கான பந்தய நடைப் போட்டியில் இந்திய அணியானது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

  • சீனாவின் செங்டு நகரில் நடைபெற்றுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக விளையாட்டுத் தொடரில் பெண்களுக்கான 20 கி.மீ பந்தய நடைப் போட்டியில் குழு அணி பிரிவில் இந்திய அணியானது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • பிரியங்கா, பூஜா குமாவத், நிகிதா லம்பா மற்றும் மான்சி நேகி ஆகியோரின் நால்வரை உள்ளடக்கிய இந்திய அணியானது 5:12:13 நிமிடங்களில் முடித்து இந்த பதக்கத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த தொடரில் சீனா (4:52:02) மற்றும் ஸ்லோவாக்கியா (5:05:36) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

ஹிரோஷிமா தினம் 2023

  • 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமான ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் நாளானது ஹிரோஷிமா தினமாக பல்வேறு நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. 
  • இந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 2,00,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் சில நொடிகளில் கொல்லப்பட்டனர் மற்றும் சில ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வீரியமிக்க அணுகுண்டின் பெயர் “லிட்டில் பாய்” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!