50GB டேட்டா இலவசம்.. WhatsAppல் பரவும் வைரல் தகவல் – காவல் துறையின் எச்சரிக்கை!

0
50GB டேட்டா இலவசம்.. WhatsAppல் பரவும் வைரல் தகவல் - காவல் துறையின் எச்சரிக்கை!
50GB டேட்டா இலவசம்.. WhatsAppல் பரவும் வைரல் தகவல் - காவல் துறையின் எச்சரிக்கை!
50GB டேட்டா இலவசம்.. WhatsAppல் பரவும் வைரல் தகவல் – காவல் துறையின் எச்சரிக்கை!

FIFA உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டை நேரலையில் காண 50 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. என்ற தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

போலி தகவல்:

போலியான தகவல்கள் ஆன்லைன் மூலம் பரவுவது அதிகம் நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக நமக்கு வரும் குறுஞ்செய்திகளின் உண்மை தன்மையை ஆராயாமல் பயனர்கள் உடனடியாக அதனை மற்றவர்களுக்கு Forward செய்கின்றனர். இதனால் சிலர் தேவையில்லாத பிரச்சனைகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகுகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மோசடி வேலைகளில் ஈடுபடும் நபர்கள் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவர்களின் வங்கி சார்ந்த மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க போலியான தகவல்களை பகிர்ந்து அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யும் படி வலியுறுத்துகின்றனர். இதனை அறியாத மக்கள் தேவையற்ற மெசேஜ்களில் வரும் லிங்கை கிளிக் செய்து ஏமாறுகின்றனர்.

28,000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது FIFA உலக கோப்பை கால்பந்தை காண இலவசமாக 50ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்ற தகவல் வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த லிங்கை கிளிக் செய்தால் 2000 ரூபாய் மதிப்பிலுள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் ஐபோன் கிடைக்கும் என்றும் மெசேஜ் அனுப்பபட்டு வருகிறது. இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை கிளிக் செய்யும் போது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உங்களின் புகைப்படங்கள் ஹேக்கர்களுக்கு சென்று விடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!