தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க நகைக்கடன் முறைகேடு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் விதமாக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் கூட்டுறவு சங்கங்களில் 31.3.2021 வரை 5 பவுன் அளவுள்ள நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு, இந்த நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். நகைக்கடன் தள்ளுபடி குறித்து அதிகாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் விவரங்கள் சேகரித்த போது நகைக்கடன் வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது. இதனால் முதல்வர் பல்வேறு நிபந்தனை அடிப்படையில் நகைக்கடன் கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

இன்று முதல் ஜன.16 வரை 8 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

அந்த நிபந்தனையை 2021 இல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தது. இந்த கருத்தில் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக கட்சி பாரபட்சம் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் ஆரணி, காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளதாகவும் மற்றும் திருவண்ணாமலையில் மார்வாடி ரத்னா லால் என்பவர் ஒரே ஆதார் அட்டை, குடும்ப அட்டையை வைத்து 5 பவுனுக்கு கீழாக மொத்தம் 672 நகை கடன்களை பெற்றுள்ளார். அதுபோல புதுக்கோட்டை கீரனூரில் ரூ. 1 கோடி மதிப்பிலான 102 நகை பைகள் இல்லை என கூறியுள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சூப்பர் நியூஸ் – மேரா ரேஷன் ஆப் பதிவிறக்கம் & அம்சங்கள்!


இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடுகள் பற்றி சட்டப்பேரவையில் நேற்று முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழகத்தில் கரும்பு கொள்முதல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. எனவே இடைத்தரகர்கள் யாரும் உள்நுழைய முடியாது என்று கூறினார். இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கத் தேர்தல் சட்டத்திருத்த மசோதா குறித்து பேசும்போது அதிமுக ஆட்சியில் தேர்தலே நடத்தாமல் கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கூட்டுறவு சங்கங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!