இந்த வார Elimination லிஸ்டில் சிக்கிய 5 போட்டியாளர்கள் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க் அதிக விறுவிறுப்பாகவும், சண்டைகளுடனும் முடிந்துள்ள நிலையில், இந்த வார எவிக்சன் குறித்த லிஸ்ட் தற்போது ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் ப்ரோமோ:
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றுடன் 21 நாட்கள் முடிவடைந்து இன்று 22 வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்கில் சண்டை உச்சத்திற்கு சென்று பலத்த தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், ஷெரீனா கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டதாக அசீம் தனலக்ஷ்மியுடன் கடுமையாக சண்டையிட்டார். கமல் சார் வந்த எபிசோடில் இதற்காக பல சீசன்களுக்கு பிறகு குறும்படம் ஒன்று, பலமுறை காட்டப்பட்டது. அதில், தனலட்சுமி யாரையும் தள்ளி விடவில்லை என்று தெளிவாக தெரிந்தது.
Exams Daily Mobile App Download
இதன்பிறகு கமல், அசீமை தனலக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அதனைத்தொடர்ந்து அசல் போட்டியை விட்டு எவிக்சன் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில், இன்றைய ப்ரோமோவில் இந்த வார Elimination லிஸ்டில் உள்ளவர்களின் பெயர்களை பிக் பாஸ் மற்ற போட்டியாளர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை குறிப்பிட்டு சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி, ஒரு விஷயத்தை வேறு விதமாக திரித்து பேசுகிறார். உடல்நலம் சரியில்லாததை பயன்படுத்திக் கொள்கிறார், அவரது கருத்துக்களை முன்வைப்பதில்லை, மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்ற வார்த்தைகளை கூறி அசீம், ஆயிஷா, ஷெரீனா, கதிரவன், விக்ரமன் போன்ற 5 பேர்களும் இந்த வார வெளியேற்ற பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.