நடப்பு நிகழ்வுகள் – 5 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 5 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 5 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் – 5 ஜூலை 2023

தேசிய செய்திகள்

SJVN ஆனது மற்றும் உர்ஜா நிறுவனத்துடன் ஒரு மின் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • 1,200 மெகாவாட் டீஸ்டா-III நீர் மின்சாரத் திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 180 மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி மேற்கொள்ளுதல் அல்லது விநியோகித்தளுக்காக சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம்(SJVN) அமைப்பானது சிக்கிம் உர்ஜா நிறுவனத்துடன்(SUL) ஆகஸ்ட் 2023 இல் ஒரு மின் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • தேவை மற்றும் விநியோகத்தின் பருவகால மற்றும் பிராந்தியம் சார்ந்த மாறுபாட்டை நிவர்த்தி செய்வதையும் மாநிலத்தின் மின் விநியோக தேவையை பூர்த்தி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிக்கிம் மாநிலத்தில் இந்த முன்னெடுப்பானது SJVN இன் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக, ஆகஸ்ட் 6 அன்று நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்தை பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

  • வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக, பிரதமர் மோடி, நாடு(இந்தியா) முழுவதும் உள்ள 508 ரயில்வே நிலையங்களின் மேம்பாடு மற்றும் மறுவடிவமைப்புக்கான திட்டத்தின் அடிக்கல்லை ஆகஸ்ட் 6 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.
  • இது நாடு முழுவதும் 1309 ரயில்வே நிலையங்களை மறுவடிவமைக்க “அமிர்த பாரத் நிலையத் திட்டம்” யின் கீழ் தொடங்கப்பட்டதாகும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 508 ரயில்வே நிலையங்களை 24,470 கோடி ரூபாய் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கும் – சவூதி அரேபியா

  • ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சவுதி அரேபியா தலைமையில் நடைபெறும் ரஷ்யா-உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தையில் நடுவராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
  • உக்ரைனில் சமீபத்திய காலங்களில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையிம் மூலம் தீர்வு காணும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என வெளியுறவு செயலர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பொது கூட்டத்தில் ரஷ்யா விலக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் நீர் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கான திட்டத்தில் இஸ்ரேல் இணைந்துள்ளது.

  • தி சர்க்கிள் வணிக மேம்பாட்டு நிறுவனமான ஃபவுண்டர்ஸ் கிளப் (எஃப்சி), இந்தியாவில் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மிக முக்கிய பிரச்சினையான நீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக  “தி வாட்டர் சேலஞ்ச்” என்ற முன்னெடுப்பு முயற்சியில் இஸ்ரேல் நாடு ஆகஸ்ட் 2023 அன்று இணைந்துள்ளது.
  • இந்த திட்டமானது ஆகஸ்ட் 03 அன்று இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதர் மற்றும் தி சர்க்கிள் நிறுவனர் கரன்பால் சிங் ஆகியோருக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முறையாக தொடங்கப்பட்டது என இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் நீர் தொழில்நுட்பங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் நீர்வள மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாக இந்த திட்டம் கொண்டுள்ளது.

இந்திய விமானப்படை(IAF) இஸ்ரேலிய NLOS பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

  • கரடுமுரடான மலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதிரிபடைகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்ட இஸ்ரேல் நாட்டின் “ஸ்பைக் நான்-லைன் ஆஃப் சைட் (NLOS)” என்ற வழிகாட்டும் ஏவுகணைகளை ஆகஸ்ட் 2023 இல் இந்திய விமானப்படையானது வாங்கியுள்ளது.
  • இந்த ஏவுகணையானது 30 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணையானது ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த Mi-17V5 ஹெலிகாப்டர்களுடன் ஒருங்கிணைத்து ராணுவத்தில் பயன்படுத்தப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் சாகர் சேது திட்டத்தின் கீழ் “துறைமுக சுகாதார அமைப்பை(PHO)” தொடங்கியுள்ளார்.

  • மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர்(MoPSW) ஸ்ரீ சர்பானந்தா சோனோவால், சாகர் சேது – தேசிய தளவாடங்கள் வலைத்தளங்கள்(கடல்சார்) திட்டத்தின் கீழ் “துறைமுக சுகாதார அமைப்பு (PHO)” தொகுதியை ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • குடிமக்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த பணியாளர்களைப் பாதுகாப்பதையும் அவர்களுக்கு நோய் கண்காணிப்பு, சுகாதார ஆய்வு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கிய காலங்களில் விரைவாக மேற்கொள்ளுவதையும் நோக்கமாக கொண்டு இந்த PHO அமைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திகள்

5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொள்கை திட்டத்தை பாகிஸ்தான் மற்றும் ஈரான் வகுக்கின்றன.

  • பாகிஸ்தானும் ஈரானும் கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக இலக்குடன் ஐந்தாண்டு வர்த்தக ஒத்துழைப்பு கொள்கை திட்டத்தை வடிவமைத்து அதை ஆகஸ்ட் 2023 அன்று வெளியிட்டுள்ளது.
  • இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகத்தில் உள்ள பொருளாதார தடைகளை நீக்குதல், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்தல் மற்றும் அந்தந்த தனியார் துறைகளுக்கு இடையே நிறுவன இணைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றை இந்த ஐந்தாண்டுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

மாநில செய்திகள்

புவனேஸ்வரில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 04 அன்று, ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புவனேஸ்வரில் புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த நிகழ்ச்சியானது மத்திய உள்துறை அமைச்சர் ஒடிஷா மாநிலத்தில் மேற்கொள்ளும் இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தில் அவர் பேரிடர் மேலாண்மை மற்றும் இடதுசாரி தீவிரவாதம் (LWE) குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் மசோதாவானது ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றம், மாநில அரசு போட்டித் தேர்வு (ஆட்சேர்ப்பில் நியாயமற்ற வழிகளைக் பயன்படுத்துதலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கை) மசோதா 2023ஐ ஆகஸ்ட் 03, 2023 அன்று நிறைவேற்றியுள்ளது. 
  • மேலும் இந்த வகையான மோசடிகளில் ஈடுப்படுவர்களுக்கு குறைந்த பட்சம் ₹10 கோடி வரை அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Jharkhand, Feb 28 (ANI): Jharkhand Chief Minister Hemant Soren during the first day of the Budget session of the state assembly, in Ranchi on Friday. (ANI Photo)

நியமனங்கள்

ஹர்ஷத் அவர்களை தலைமை முதலீட்டு அதிகாரியாக(சிஐஓ) நியமித்துள்ளதாக யூனியன் ஏஎம்சி அமைப்பு அறிவித்துள்ளது.

  • யூனியன் ஏஎம்சி அமைப்பானது ஹர்ஷத் பட்வர்தன் அவர்களை அந்நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாக(CIO) நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் 2006 முதல் 2016 வரை, ஜேபி மோர்கன் (ஜேபிஎம்) சொத்து மேலாண்மை சேவை நிறுவனமான ஈக்விட்டிஸ் இந்தியாவின் CIO ஆக  பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது சிறப்பான ஆளுமையின் மூலம் இவர் நிறுவனத்தினை மேம்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய AMC இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜி பிரதீப்குமார் கூறியுள்ளார். 

நிர்பயா மிஸ்ரா வெஹர் நிறுவன மேம்பாட்டு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நெட்வொர்க் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனமான Vehere, அதன் கார்ப்பரேட் பிரிவின் மேலாண்மை இயக்குநராக நிர்பயா கிஷோர் மிஸ்ராவை ஆகஸ்ட் 2023 இல் நியமித்துள்ளது.
  • பல்வேறு தொழில்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலான கார்ப்பரேட் அனுபவம் கொண்ட இவர் தனது சிறப்பான முன்னெடுப்பு முயற்சிகளின் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

Firstsource நிறுவனமானது FirstSenseAI இயங்குதளத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

  • வணிக செயல்முறை சேவைகளின் உலகளாவிய வழங்குநரான ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமானது, புதிய செயற்கை நுண்ணறிவு தளமான FirstSenseAI-ஐ அறிமுகப்படுத்துவதாக ஆகஸ்ட் 2023 இல் அறிவித்துள்ளது.
  • சில நொடிகளில் வாடிக்கையாளரின் போதுமான தேவைகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் திறனுடன், இந்த AI ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளதென்றும் செயல்முறை செயல்திறனை மேம்படுத்தும் வேளையில் பொது வாடிக்கையாளர் முன்னனுபவம் மற்றும் தொழிநுட்ப அனுபவத்தையும் அதிகரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் கபில் சோனோவால் வெண்கலம் வென்றுள்ளார்.

  • இந்திய விளையாட்டு நட்சத்திரம் கபில் சோனோவால் ஆகஸ்ட் 03 அன்று நடைபெற்ற ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 102 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 
  • 16 வயதான அவர் இந்த பதக்கத்தை அடைய மொத்தம் 276 கிலோ (அதாவது 125 கிலோ + 151 கிலோ) தூக்கி மேடையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மண்டலத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் தென் மண்டலம் வீழ்த்தி “தியோதர் கோப்பையை” வென்றுள்ளது.

  • ஆகஸ்ட் 03 அன்று நடைபெற்ற தியோதர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக இந்த சாம்பியன்ஷிப் கோப்பையை தென் மண்டலத்தின் ஜாகர்நாட் வென்றுள்ளது.
  • பேராசிரியர் டி.பி. தியோதர் டிராபி என்பது இந்தியாவின் பிரிவு ஏ உள்நாட்டு கிரிக்கெட் போட்டி தொடராகும். மேலும் இந்தப் தொடரானது 1973-74 காலங்களில் மண்டலங்களுக்கு(மண்டல பிரிவு) இடையேயான போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை விளையாடப்பட்டு வரக்கூடிய கிரிக்கெட் தொடராகும்.

17 வயதான டி குகேஷ், சதுரங்க ஜாம்பவானான விஸ்வநாத ஆனந்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் முதல் தரவரிசை சதுரங்க விளையாட்டு வீரர் ஆனார்.

  • தமிழகத்தை சேர்ந்த 17 வயதான டி. குகேஷ், நேரடி உலக சதுரங்க தொடர் தரவரிசையில் இந்தியாவின் முதல் சதுரங்க விளையாட்டு  வீரராக, கிராண்ட்மாஸ்டர் மற்றும் சதுரங்க உலகின் ஜாம்பவனான விஸ்வநாத ஆனந்தின் 37 ஆண்டுகால ஆட்சியை கடந்த ஆகஸ்ட் 03 அன்று முறியடித்தார்.
  • அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற FIDE உலகக் கோப்பையில் கிளாசிக் ஓபன் பிரிவில் உலகின் 9-வது இடத்திற்கு முன்னேற 2755.9 நேரடி புள்ளிகள் மதிப்பீட்டைப் பெற்றார் மற்றும் 2754.0 மதிப்பெண்களுடன் ஆனந்த் பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • மேலும் ஆனந்த் 1986 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை இந்த உலக தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு மட்டுமே சரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெண்டலா ஹரிகிருஷ்ணா மற்றும் ஆனந்திற்குப் பிறகு உலகின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த “மூன்றாவது இந்தியர்” என்ற அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார்.

பொருளாதார செய்திகள் 

அடுத்து வரும் எட்டு ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்கு 6.7% வளர்ச்சியை எட்டும் – S&P குளோபல் அறிக்கை.

  • சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான S&P குளோபல் ஆனது அடுத்து வரும் எட்டு நிதியாண்டுகளில் இந்தியாவானது ஆண்டுக்கு 6.7% வளர்ச்சியடையும் என்றும் நிதியாண்டு2024 முதல் நிதியாண்டு 2031 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவானது $3.4 டிரில்லியனில் இருந்து $6.7 டிரில்லியன் ஆக உயரும் எனவும் தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • மேலும் இந்த நிதியாண்டுகளில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சுமார் $4,500 டாலராக ஆக உயரும் வாய்ப்புள்ளது என்று அந்த  நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “முன்னோக்கி: இந்தியாவின் தருணம்” என்று பெயரிடப்பட்டுள்ள தலைப்பின் கீழ் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!