TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு, திறமைக்கு மதிப்பு – COO சுப்ரமணியம்!
டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரி நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது தொடர்பான தகவல்களை பத்திரிகை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பணி நியமனம்:
டிசிஎஸ் நிறுவனம் நாட்டில் அதிக பட்சமாக 5 லட்சம் ஊழியர்களுடன் செய்யப்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். 2021ம் நிதியாண்டில் புதிதாக 40,000 பேர்களை நிறுவனம் பணி நியமனம் செய்துள்ளது. மீதம் உள்ள நாட்களிலும், இதே அளவிற்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நியமனம் செய்ய உள்ளது. ஜூன் 2021 உடன் முடிவடையும் காலாண்டில் 8.6% என்ற மிக குறைந்த அளவிலான நிறுவனத்தின் இழப்பு விகிதம் உள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பான், ஆதார் கார்டு இணைப்பு!
டிசிஎஸ் ன் சிஓஓ என் கணபதி சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நிறுவனத்திற்கு அதிக ஊதியம் பெரும் நபர்களை தேர்வு செய்வதை விட திறமை அடிப்படையில் புதியவர்களை மேம்படுத்தும் யுத்தியை கையாண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பலனளிப்பதாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுக்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
நடப்பு ஆண்டின் TCS இன் தேசிய தகுதித் தேர்வுக்கு (NQT) சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்தனர். ஆனால் அவர்களில் இருந்து நிறுவனம் 40,000 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தது. டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள தேர்வு முறையினால் குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க எவ்வளவு நேரத்தை தேர்வர் எடுத்துள்ளார் என்பதை நாங்கள் அறிய முடியும். அவர்களின் செயல்திறனை நாங்கள் நன்கு உணர முடியும். இதன் மூலம் அவர்களின் சிறப்பை உணரவும், பயிற்சி தேவைபடும் துறைகளில் பயிற்சி வழங்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்