அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

வரும் ஜூன் 11 முதல் 15 வரையுள்ள தினங்களில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களில் செயல்படும் வங்கிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜூன் மாதத்தில் சுமார் 12 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விடுமுறைகள் ஏற்கனவே முடிவு பெற்ற நிலையில் இப்போது அடுத்து வரும் 20 நாட்களில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மூடப்பட இருக்கிறது. அந்த வகையில் நாளை முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தொடர்ச்சியான வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 11 முதல் 15 வரையுள்ள 4 நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு – முதியோர் & விதவை ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவு!

இந்த விடுமுறைகள் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கான பொது விடுமுறைகள் ஆகும். மற்றபடி பண்டிகைகள் இல்லாத மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல செயல்படும். இப்போது பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்காக அளிக்கப்பட்டுள்ள விடுமுறை பட்டியலில், அடுத்து வரும் 5 நாட்களில் 2 விடுமுறைகள் உள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் வார இறுதி விடுமுறைகள் ஆகும். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

அதன் படி வரும் ஜூன் 11ம் தேதியன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அடைக்கப்படும். இதை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. இது தவிர ஜூன் 11 முதல் 15 வரையிலான வங்கி விடுமுறை பட்டியலின் படி,

 • ஜூன் 11 – இரண்டாவது சனிக்கிழமை
 • ஜூன் 12 – ஞாயிறு
 • ஜூன் 14 – சந்த் குரு கபீர் ஜெயந்தியை முன்னிட்டு சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசாவில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
 • ஜூன் 15 – ஒய்எம்ஏ தினம், குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்தநாள் மற்றும் ராஜா சங்கராந்தியை முன்னிட்டு ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகள் அடைக்கப்படும்.

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here