ஜூன் 11 முதல் 4 நாட்களுக்கு விடுமுறை – அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் வரும் 11ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த முழு பட்டியலையும் இப்பதிவில் காணலாம்.
விடுமுறை அறிவிப்பு
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜூன் மாதத்தில் அரசு பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை என சுமார் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 3 நாள் விடுமுறைகள் முடிந்திருக்கும் நிலையில் அடுத்து வரும் வாரத்தில் தொடர்ச்சியாக 4 வங்கி விடுமுறைகள் வருகின்றது. அதாவது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் ஜூன் 11 முதல் 15 வரையுள்ள தினங்களில் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இத்துறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – OPS வலியுறுத்தல்!
இது குறித்த விடுமுறை பட்டியலில் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை தினங்களான இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு ஆகியவை அடங்கும். இருப்பினும், மற்ற 2 நாள் விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது இல்லை. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்ற கருவிகள் சட்டத்தின் படி இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமை உள்ளிட்ட அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்.
Exams Daily Mobile App Download
இது தவிர ஜூன் 11 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் அளிக்கப்பட்டுள்ள வங்கி விடுமுறைகளை இப்போது பார்க்கலாம்.
- ஜூன் 11 – இரண்டாவது சனிக்கிழமை, பொது விடுமுறை
- ஜூன் 12 – ஞாயிறு பொது விடுமுறை
- ஜூன் 14 – சந்த் குரு கபீர் ஜெயந்தியை முன்னிட்டு சண்டிகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 15 – குரு ஹர்கோவிந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.