வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ‘இந்த’ நான்கு நாட்கள் வங்கிக்கு போகாதீங்க!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 'இந்த' நான்கு நாட்கள் வங்கிக்கு போகாதீங்க!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வங்கி சேவைகள் நான்கு நாட்கள் கிடைக்காது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வங்கி விடுமுறைகள்:

2023 – 24ஆம் நிதியாண்டு நடப்பு மார்ச் மாதத்தின் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை நாட்கள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த வாரம் மார்ச் 29ஆம் தேதி அன்று புனித வெள்ளி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை, அதனை தொடர்ந்து மார்ச் 30 சனிக்கிழமை, மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு நிதியாண்டின்  கணக்குகள் முடிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு  விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கப்படக்கூடிய நிலை உள்ளதால் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்றும், அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.38,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஏப்ரல் 1ஆம் தேதி அன்று இறுதி ஆண்டு கணக்குகள் முடிக்கப்படுவதற்கான பணிகள் நடைபெறும். இதற்காக பணியாளர்கள் வங்கிக்கு வந்து பணியை மேற்கொள்வார்கள். ஆனால் பொது மக்களுக்கான சேவைகள் கிடைக்காது. ஆகவே இந்த நான்கு நாட்களும் பொதுமக்கள் வங்கி சேவையை பெற முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள்,சிறு, குறு வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அத்தியாவசிய வங்கிப் பணிகளை இதற்கு முன்னதாக முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த விடுமுறை நாட்களில் ஏடிஎம் மையங்கள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் வழக்கம் போல் இருக்கும் என்றும், ஏடிஎம் மையங்கள் முழு கொள்ளளவு உடன் செயல்படும் என்றும், பணம் தீர்ந்தாலும் உடனே நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!