மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி 34% ஆக உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி 34% ஆக உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி 34% ஆக உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் அகவிலைப்படி 34% ஆக உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வினால் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

34% ஆக DA உயர்வு:

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க முடிவு செய்தது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று முதல் விடுமுறை!

அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 28% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 31% வழங்க அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட 31% அகவிலைப்படியோடு 3% உயர்த்தி 34% ஆக வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதியமைச்சக வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 பொருட்கள் பொங்கல் பரிசு 2022 – டெண்டர் பணிகள் தீவிரம்!

இத்தகைய அகவிலைப்படி உயர்வு தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் தீபாவளி பண்டிகை போனஸை தொடர்ந்து தற்போது புத்தாண்டுக்கு மற்றுமொரு போனஸ் வழங்கப்பட உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அவ்வாறு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டால் எவ்வளவு சம்பளம் உயரும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஊதிய விபரம்:

  • அடிப்படை ஊதியம்: 18,000
  • 31% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.5,580
  • 34% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.6,120

31% க்கும், 34% க்கும் உள்ள வித்தியாசம் மாதத்திற்கு ரூ.540 எனில் வருடத்திற்கு ரூ.6,480 ஊதிய உயர்வு கிடைக்கும்.

  • அடிப்படை ஊதியம்: ரூ.56,900
  • 31% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.17,639
  • 34% அகவிலைப்படி மாதத்திற்கு – ரூ.19,346

31% க்கும், 34% க்கும் உள்ள வித்தியாசம் மாதத்திற்கு ரூ.1,707 எனில் வருடத்திற்கு ரூ.20,484 ஊதிய உயர்வு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here