உக்ரைன் தலைநகர் கீவில் தொடரும் ரஷ்யாவின் ஆதிக்கம் – நிலைகுலைந்த மக்கள்! 2வது நாள் போர் தீவிரம்!

0
உக்ரைன் தலைநகர் கீவில் தொடரும் ரஷ்யாவின் ஆதிக்கம் - நிலைகுலைந்த மக்கள்! 2வது நாள் போர் தீவிரம்!
உக்ரைன் தலைநகர் கீவில் தொடரும் ரஷ்யாவின் ஆதிக்கம் - நிலைகுலைந்த மக்கள்! 2வது நாள் போர் தீவிரம்!
உக்ரைன் தலைநகர் கீவில் தொடரும் ரஷ்யாவின் ஆதிக்கம் – நிலைகுலைந்த மக்கள்! 2வது நாள் போர் தீவிரம்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் போரில் உக்ரைன் நாடு முழுவதும் உள்ள இராணுவ தளங்களை தாக்கியதில் உக்ரேனியா மொத்தமும் நிலை குலைந்துள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

போர் பதற்றம்

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் இதுவரை உக்ரைனை சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி இருக்கின்றனர். அதே நேரத்தில் அந்நாட்டின் ராணுவ கிடங்குகள் உட்பட 6 முக்கிய விமான ஓடுதளங்களும் முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. இப்போது உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக தங்களது கரங்களை நீட்ட முடியாத சூழலில், தங்களை தற்காத்து கொள்வதற்காக உக்ரைன் அரசாங்கம் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!

இந்த நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான 2வது நாள் யுத்தம் இன்னும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 800 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 போர் டேங்குகள் மற்றும் 6 ஹெலிகாப்டர்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனில் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து தரைப்படைகள் நகர்ந்திருக்கும் வேளையில், ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள இராணுவ தளங்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு கருணைத்தொகை ரூ.24,000 ஆக அதிகரிப்பு – அரசின் அதிரடி அறிவிப்பு!

இதனால் பல உக்ரேனியர்கள் குண்டுவீச்சு சத்தத்தால், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது உக்ரைன் படையெடுப்பின் முதல் நாளில் தனது அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும், நிலம் சார்ந்த 83 உக்ரைன் இலக்குகளை அழித்ததாகவும் ரஷ்யா கூறியது. ஆனால் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, ரஷ்யா முதல் நாள் தொடக்கத்தில் இருந்து உக்ரைன் மீது 203 தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அந்த வகையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிகப்பெரிய போராக உருவெடுத்துள்ள ரஷ்யாவின் இந்த தாக்குதல் தரை, கடல் மற்றும் வான் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!