தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!

0
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை - ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை - ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவியல் நகரம் தெரிவித்துள்ளது.

அறிவியல் விருது:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அரசு சார்பாகவும், பள்ளி நிர்வாகங்கள் சார்பாகவும் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கிராமப்புற பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மாணவர்களுக்கு என்று தனியாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உக்ரைன், ரஷ்யா இடையே 2வது நாளாக தொடரும் போர் – 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு!

உதவித்தொகையை தொடர்ந்து தற்போது கிராமபுற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதியில் உள்ள மாணவர்களின் அறிவியல் ஆய்வு திறனை வெளிக்கொணரும் வகையில் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியில் கொண்டு வரும் நோக்கிலும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு கருணைத்தொகை ரூ.24,000 ஆக அதிகரிப்பு – அரசின் அதிரடி அறிவிப்பு!

அதில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் 2 சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் sciencecitychennai.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் முன்மொழியப்பட்டு அறிவியல் நகரத்துக்கு மார்ச் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தெடுக்கப்படுபவர்க்ளுக்கு 1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here