2021ம் ஆண்டு நடந்த முக்கிய தமிழ் சீரியல் / சினிமா பிரபலங்களின் திருமணம் – ஒரு கண்ணோட்டம்!

0
2021ம் ஆண்டு நடந்த முக்கிய தமிழ் சீரியல் / சினிமா பிரபலங்களின் திருமணம் - ஒரு கண்ணோட்டம்!
2021ம் ஆண்டு நடந்த முக்கிய தமிழ் சீரியல் / சினிமா பிரபலங்களின் திருமணம் - ஒரு கண்ணோட்டம்!
2021ம் ஆண்டு நடந்த முக்கிய தமிழ் சீரியல் / சினிமா பிரபலங்களின் திருமணம் – ஒரு கண்ணோட்டம்!

தற்போதைய 2021ம் ஆண்டில் பல பிரபலமான தமிழக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பற்றிய சில தகவல்களை ஒரு கண்ணோட்டமாக இந்த பதிவில் காணலாம்.

2021 திருமணங்கள்:

தமிழகத்தில் பிரபலமாக உள்ள பல நட்சத்திரங்களும் அவர்களின் காதலர்களை 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சில மாதம் திருமணத்தை தள்ளிவைத்திருந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சமயத்தில் அடுத்தடுத்து பல பிரபலங்களும் தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர். இவர்களின் திருமணத்தை பற்றிய சில தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் இத்தனை பிரபலங்கள் இந்த வருடத்தில் திருமண பந்தத்தில் நுழைந்துள்ளனர் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சிபி? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

அதில், அனைவரும் எதிர்பார்க்காத ஆனால் மிகவும் ரசித்து கொண்டாடிய திருமணம் என்று பார்த்தால் அது செம்பருத்தி ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் திருமணம் தான். இவர்கள், இருவரும் நவம்பர் 11ம் தேதி தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அடுத்தபடியாக ஷாபனாவின் நெருங்கிய தோழியான ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் நவம்பர் 15ம் தேதி நடந்தது. ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது காதலிக்க தொடங்கினார்கள். அதன்பிறகு, நவம்பர் 25ம் தேதி நடந்த மற்றொரு சின்னத்திரை திருமணம் தான் சித்து மற்றும் ஷ்ரேயா திருமணம். இவர்கள் இருவரும் திருமணம் சீரியலில் கணவன், மனைவியாக நடிக்கும் போதே காதலிக்க தொடங்கினார்கள்.

தனது திருமணத்தன்று சித்து, சீரியலுக்காக தான் தாலி கட்டிய அதே பெண்ணை தான் நிஜத்திலும் திருமணம் செய்து கொள்வேன் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். அடுத்தபடியாக அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்த திருமணம் என்று பார்த்தால் அது சினேகன் மற்றும் கன்னிகா திருமணம் தான். இருவரும் 8 வருடமாக காதலித்த விஷயம் அவர்களின் நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாமல் இருந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 16 வருட வயது வித்தியாசம் இருந்த போதிலும், மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் திருமணம் உலக நாயகன் கமல் தலைமையில் தான் நடந்துள்ளது. அடுத்தபடியாக சின்னத்திரை தொகுப்பாளர் நட்சத்திரா மற்றும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ராகவ் திருமணம், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து காதலிக்க தொடங்கியுள்ளனர்.

மீண்டும் சீரியலில் அம்மன் வேடத்தில் களமிறங்கும் நடிகை ரட்சிதா – ரசிகர்கள் உற்சாகம்!

நட்சத்திரா காதலித்து வந்த செய்தி அனைவருக்குமே ஆச்சர்யத்தை அளித்து வந்தது. நட்சத்திரா தனது திருமணம் தனது ஆசைப்படி நடக்க வேண்டும் என்று பொறுத்திருந்து திருமணத்தை நடத்தியுள்ளார். இதேபோல், நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் திருமண விவாகாரத்திற்கு பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஏப்ரில் 22ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதேபோல், நடிகர் கார்த்தி தனது முதல் திருமண விவாகரத்திற்கு பிறகு நடிகை அஷ்மிதா ஸ்ரீனிவாசன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் கனியின் சகோதரி நிரஞ்சனி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த வருடம் திருமணம் ஆன மற்றொரு நடிகை கயல் ஆனந்தி. இவர் தனது அலாவுதீனும் அற்புத காமெராவும் படத்தின் துணை இயக்குனர் சாக்ரடீஸை ஜனவரி 7ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த விஷயம் இவர்கள் திருமணத்திற்கு பிறகு தான் அனைவர்க்கும் தெரிய வந்தது. நடிகை வித்யூ லேகா மற்றும் தொழில் அதிபர் சஞ்சய் இருவரும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் பழக தொடங்கி, காதலிக்க தொடங்கி இரண்டு வீட்டார் சம்மதத்துடன் செப்டம்பர் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நகைசுவை நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, மகராசி சீரியல் நாயகி மோனிகா தேவி, சித்தி 2 வினிதா, பகல் நிலவு சீரியல் நடிகை ஷப்னா அபிஷேக், ஜெய் பீம் நடிகை லீஜு மோல், இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் ரகுமானின் மூத்த மகள் மற்றும் நடிகை சரண்யா மற்றும் நடிகர் பொன்வண்ணன் மூத்த மகள் பிரியதர்ஷினி, வருண் தவான் மற்றும் நடிகை கத்ரீனா கைப் போன்ற பல பிரபலங்களும் இந்த வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!