2021 நீட் தேர்வு விண்ணப்பிக்கும் இணையதளம் முடக்கம் – தேசிய தேர்வு முகமை!!
நடப்பாண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியுள்ள நிலையில், விரைவில் இணையதளம் சரி செய்யப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருந்த காரணத்தால் அனைத்து மாநில மற்றும் கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்க தேர்வு வாரியங்கள் முடிவு செய்துள்ளது. அதன்படி, இறுதி மதிப்பெண்களை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் உயர்கல்வி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு மதிப்பெண்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவியும் மக்கள் – பிரான்ஸ் அதிபரின் புதிய விதிகள்!!
இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவு தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதனால் மருத்துவ படிப்பிற்கு சேர இருந்த மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடத்த இருப்பதாகவும், மாணவர்கள் இன்று ( ஜூலை 13) மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு விண்ணப்ப தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நிமிடங்களில் தேசிய தேர்வு முகமையின் விண்ணப்ப பதிவு தளம் முடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் தளம் முடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இணையதள முடக்கம் சரி செய்யப்படும் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.