அமேசான் நிறுவனத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்!

0
அமேசான் நிறுவனத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்!
அமேசான் நிறுவனத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்!
அமேசான் நிறுவனத்தில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 2025 ஆம் ஆண்டுக்குள் திட்டம்!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமாக செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளுக்குள்ளாக சுமார் 1 கோடி வணிக தளங்களை டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளது. அதம் மூலம் சுமார் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் செயல்பட்டு வரும் இ-காமர்ஸ் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 12 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கு முன் அடுத்த 2025 ஆம் ஆண்டுக்குள், அமேசான் நிறுவனம் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூறிய அமேசான் நிறுவனத்தின் இந்திய கிளையின் மூத்த உலகளாவிய துணைத் தலைவர் அமித் அகர்வால், புதிய பணியமர்த்தல் தொடர்புடைய இலக்கை நியமித்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல் – மருத்துவ கல்லூரிகளில் பரவும் கொரோனா!

அதன்கீழ் இந்த நிறுவனம் இப்போது 1 கோடி சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை மேம்படுத்தவும், மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் கட்டண தளத்தில் 1 கோடி உள்ளூர் கடைகளை டிஜிட்டல் மயமாக்கவும் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம், இந்தியாவின் உள்ளூர் வணிகங்களுக்கும் உதவும் (சுமார் ரூ. 74,113 கோடி) என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியாவில் அமேசான் விற்பனையாளர் தளம் தற்போது 8.5 லட்சத்தை தாண்டியுள்ளது எனவும் அதில் கடந்த 18 மாதங்களுக்குள் 3 லட்சம் புதிய வணிகங்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் உள்ளூர் வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களான இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு அமேசானின் பங்களிப்பு ஒரு எடுத்துக்காட்டு என அகர்வால் கூறியுள்ளார். அதன் படி இன்று, சுமார் 70,000 க்கும் மேற்பட்ட வணிகங்கள் அமேசான் மூலம் உலகளாவிய சந்தைகளுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றன. இவை அனைத்தும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சுமார் ரூ.22,237 கோடி ஏற்றுமதி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரம் அமேசான் பே தளத்தின் மூலம், இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு வணிகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!