‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதாவின் குட்டி ஸ்டோரி – வெற்றி ரகசியம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சுஜிதாவின் குட்டி ஸ்டோரி - வெற்றி ரகசியம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை சுஜிதாவின் குட்டி ஸ்டோரி - வெற்றி ரகசியம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதாவின் குட்டி ஸ்டோரி – வெற்றி ரகசியம்!

தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை சுஜிதா தற்போது பாண்டியன் ஸ்டார்ஸ் தனம் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் ரசிகர் வட்டாரத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் இதுவரை கதாநாயகியாக நடிக்காத காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகை சுஜிதா:

தமிழ் சினிமா வரலாற்றில் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி நடிப்பு திறமையால் கலக்கி வந்தவர் நடிகை சுஜிதா. அவர் பிறந்து 45 நாட்களில் அப்பாஸ் என்ற படத்தில் கே ஆர் விஜயாவின் பேத்தியாக நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தாணை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அவர் தமிழ் மட்டுமல்லாது, குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

நயன்தாரா போலவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை – வெளியான வீடியோ!

பூவிழி வாசலிலே படத்தில் ‘சின்னச் சின்ன ரோஜா பூவே’ என சத்யராஜ் பாடிய பாடலில் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அதன் பின்னர் ஐந்து மொழிகளில் வெளியான அந்த படத்தில் அவரே நடித்துள்ளார். 1987 மற்றும் 1988-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி அவார்ட் அவர் பெற்றுள்ளார். மலையாளத்தில் வஷி, பிரியில்லா நாம், தமிழில் தேவர் மகன், பாம்பே, வாலி, ஆயிரத்தில் ஒருவன், பள்ளிக்கூடம், தாண்டவம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சாய்பல்லவியின் தியா படத்தில் மருத்துவராக நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பெயர் வாங்கினாலும், சினிமாவில் கதாநாயகியாக அவர் நடிக்கவில்லை. காரணம் கிளாமராக நடிக்க தனக்கு பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் முதன் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். பின்னர் உறவுகள், சுயம்வரம், அக்கா தங்கை, திருவிளையாடல், பிருந்தாவனம், சவுந்தர்யா, கல்பனா, சுந்தர கண்டா, மருதாணி, இந்திரா, விளக்கு வச்ச நேரத்துல, மைதிலி, சங்கமம், சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘என் கணவருக்காக’ என பல தொடர்களில் நடித்தார். ஜீ தமிழ் ‘ஒரு கை ஓசை’ சீரியலில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ஹரிச்சந்தனம் என்ற சீரியலில் “உன்னிமயா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அவர் தற்போது விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன் மூலம் அவருக்கு எதிர்பார்க்காத அளவு புகழ் கிடைத்துள்ளது. இதற்காக விஜய் டிவி விருது ஒன்றும் வழங்கி உள்ளது. சுஜிதா திரையுலகிற்கு வந்து 34 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரையில் மட்டுமே 14 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் பயணம் தொடர்கிறது. சீரியல், சினிமா எதுவாக இருந்தாலும் கதையில் தன்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவத்தை பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!