நடப்பு நிகழ்வுகள் – 20 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 20 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 20 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 20 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

300 மெகாவாட் திறன்கொண்ட சூரிய சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் அரசு மற்றும் என்எல்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • CPSU திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 300 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் அரசாங்கத்தின் உர்ஜா விகாஸ் நிகாம் அமைப்புடன்(RUVNL) மத்திய அரசுக்கு சொந்தமான என்எல்சி இந்தியா நிறுவனமானது ஒரு பகிர்மான ஒப்பந்தம் செய்துள்ளதாக  ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அம்மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சூரிய சக்தியை வழங்குவதை முதன்மையான நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என NLC தெரிவித்துள்ளது. NLCIL அமைப்பானது தமிழ்நாட்டிற்கு வெளியே இந்த திறனை விரிவுபடுத்துவது இதுவே முதல் முறை மற்றும் தற்போது வரை தென் மாநிலத்தில் 1.40 ஜிகாவாட் திறன் கொண்ட அமைப்பை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு நாட்டு பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் எத்தியோப்பியா நாட்டின் ஜனநாயகக் குடியரசின் பிரதமர் அபி அகமது ஆகியோர் ஆகஸ்ட் 18 அன்று இரு நாடுகளுக்கிடையேயான பல நிறுவன மேம்பாட்டுக்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
  • இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார வளர்ச்சி மற்றும் இரு நாடுகளின் செழிப்பை முன்னேற்றுவதற்கான ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் நிறுவனங்களின் கூட்டாண்மைகளை வளர்ப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகெங்கிலும் உள்ள “மீன்பிடி சமூகங்கள் மீதான சர்வதேச மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் 2023” ஆனது தொடங்கப்பட்டுள்ளது.

  • உலகெங்கிலும் உள்ள மீன்பிடி சமூகங்கள் மீதான சர்வதேச மாநாடு 2023 (ICFC 2023) ஆனது செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 வரை தென் கொரியாவில் உள்ள Busan Port International Exhibition and Convention Centre (BPEX) என்ற மாபெரும் அரங்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள மற்றும் பல்வேறு நாடுகளின் மீனவ சமூகங்களின் ஒன்றிய பிரதிநிதிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், எல்லை தாண்டிய மீன்பிடிப்பு சர்ச்சைகள் மற்றும் கூட்டுறவு தீர்வுகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மாநாடானது ஜெய்ப்பூரில் நடத்த திட்டம்.

  • ஜி20 இந்திய தலைமையின் கீழ் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மாநாடானது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆகஸ்ட் 24 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற கூடிய இரண்டு நாள் மாநாடாகும். 
  • இந்திய குடியரசு தலைவரால் முன்வைக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கை சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் உலகளாவிய வாணிபம் மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஆகியவற்றை விவாத தலைப்பாக கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பகவான் பிர்சா முண்டா சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த திட்டம்.

  • மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சரவையானது ஆகஸ்ட் 18 2023 அன்று, அம்மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் சாலை மேம்பாட்டு இணைப்பை மேம்படுத்துவதற்காக பகவான் பிர்சா முண்டா சாலைத் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 
  • மாநிலத்தில் உள்ள குறு மற்றும் தொலைதூர கிராமம் மற்றும் மலையில் வசிக்கும் பழங்குடியின பகுதிகளை முக்கிய சாலைகளுடன் இணைப்பதே நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நியமனங்கள்

பொலிவியா நாட்டிற்கான இந்தியத் தூதராக  விஸ்வாஸ் விது சப்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தெற்கு அமெரிக்க பெரு நாட்டிற்கான இந்தியத் தூதர் விஸ்வாஸ் விது சப்கல், தற்போது பொலிவியா நாட்டிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • நவம்பர் 2015 இல் புதுதில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையேயான உச்சி மாநாட்டில் அவர் சிறப்புப் பணிகளை செய்து இரு நாடுகளின் ராஜ தந்திர உறவுகளை மேம்படுத்தியதற்காக பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகளாவிய IIHM குழுமத்தின் இயக்குநராக நீல் ரிப்பிங்டன் நியமனம்.

  • சர்வதேச உணவக மேலாண்மை நிறுவனமான IIHM, அதன் தலைமைக் குழுவில் உலகளாவிய இயக்குநராக நீல் ரிப்பிங்டன் அவர்களை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.
  • புகழ்பெற்ற சமையல்காரர் மற்றும் சமையல் கல்வியாளரான இவர் தனது சீரிய முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சமையல் மற்றும் விருந்தோம்பல் துறை சார்ந்த அனுபவம் மற்றும் மூலபாய உத்திகள், சிறப்பாக கையாளும் திறனுக்காக இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

ஸ்ரீ ராகேஷ் குமார் ஜெயின் அவர்களுக்கு தலைமை CFO விருதானது வழங்கப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 17, 2023 அன்று சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிஎம்ஓ ஆசியா விருதுகளின் 14வது பதிப்பில் சிறந்த தலைமை CFO விருதானது  ஸ்ரீ ராகேஷ் குமார் ஜெயின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • GAIL நிறுவனத்தின் CFO ஆக உள்ள இவரின் பாராட்டத்தக்க தலைமைத் திறன், நிதிச் செயல்பாடுகளில் பலமிக்க திறமை மற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

THDC நிறுவனத்திற்கு ‘NTPC ராஜ்பாஷா ஷீல்டு விருது 2023’ ஆனது வழங்கப்பட்டுள்ளது.

  • 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய ‘NTPC ராஜ்பாஷா கேடயம் (ஆறுதல்) விருதைப் பெற்றுள்ளதாக THDC இந்தியா நிறுவனமானது தனது ஆகஸ்ட் 2023 மாத அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த மதிப்புமிக்க விருதினை THDC நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான(CMD) ஆர்.கே.விஷ்னோய் பெற்று கொண்டுள்ளார். மேலும் இந்த விருதானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு மகாராஷ்டிர மதிப்புமிக்க ‘உத்யோக் ரத்னா’ விருதானது வழங்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் தொழில் துறையில் தனது சிறப்பான பங்கை வெளிப்படுத்தியதற்காக மகாராஷ்டிரா மாநில அரசின் முதல் ‘உத்யோக் ரத்னா’ விருதானது மூத்த தொழிலதிபர் மற்றும் பத்ம விபூஷன் ரத்தன் டாடா அவர்களுக்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகஸ்ட் 19 அன்று வழங்கியுள்ளார்.
  • அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் இந்த மதிப்புமிக்க விருது மற்றும் ரூ.25 லட்சம் காசோலை, அதன் அடையாள பதக்கம் மற்றும் கவுரவச் சான்றிதழை மும்பையின் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்தில் ரத்தன் டாடா அவர்களுக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கலப்பு ஏர் பிஸ்டல் அணியானது தங்கம் வென்றுள்ளது.

  • ஆகஸ்ட் 18 அன்று அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ISSF உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் துருக்கி நாட்டின் அணியை தோற்கடித்து இந்திய அணியானது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
  • துப்பாக்கிச் சுடும் வீரர்களான ஷிவா நர்வால் மற்றும் இஷா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடியானது 16-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் துருக்கி அணியை தோற்கடித்து இந்த பதக்கத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தியா இந்த தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திலும் சீனாவின் அணியானது ஐந்து தங்கம் மற்ற பதக்கங்களுடன் முதலிடத்திலும் உள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய இளையோருக்கான நீர்வாழ் சாம்பியன்ஷிப் தொடரில் ராணா பிரதாப் தங்கம் வென்றுள்ளார்.

  • ஒடிஷாவின் தலைநகரமான புவனேஸ்வரில் 2023 ஆம் ஆண்டிற்கான 39வது சப் ஜூனியர் மற்றும் 49வது தேசிய இளையோருக்கான நீர்வாழ் சாம்பியன்ஷிப் தொடரில் ராணா பிரதாப் ஜார்கண்ட்டின் முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
  • மேலும் இவர் பகுதி I ஆண்களுக்கான 200மீ பிரிவில் பரபரப்பான நீச்சல் திறமையுடன் 2:21.88 நிமிடங்களில் புதிய மற்றும் நாட்டின் தேசிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

உலக கொசு தினம் 2023

  • “பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகின்றன”  என்று பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ் 1897 ஆம் ஆண்டு  கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் நாளானது “உலக கொசு நாள்” என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான எந்த ஒரு கருப்பொருளும் இல்லை. மேலும் இது மலேரியா போன்ற கடும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் அதை பற்றிய விழிப்புணர்வை உலக பொது மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது. 

அக்ஷய் உர்ஜா திவாஸ் 2023

  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அதன் முக்கிய மேம்பாடு திட்டங்களை பொது மக்களிடையே உறுதிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் நாளானது அக்ஷய் உர்ஜா திவாஸ் ஆக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2004 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது மேலும் இந்த நாளானது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!