ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த மாநிலத்திற்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், பண்டிகை தின விடுமுறை எந்தெந்த மாநிலங்களில் அந்த பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை – முழு விவரங்கள் இதோ!

மேலும், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும் சேர்த்து 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தனியார், பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் பொருந்தும்.

Exams Daily Mobile App Download

தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை தினங்களை பார்க்கலாம்,

ஆகஸ்ட் 8: முஹர்ரம் (அஷூரா) காரணமாக ஜம்மு, ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 9: முஹர்ரம் (ஆஷூரா) காரணமாக அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் காரணமாக அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் காரணமாக கான்பூர் மற்றும் லக்னோ வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் காரணமாக இம்பால் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) காரணமாக பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 19: கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா), விநாயகர் சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி வங்கிகளுக்கு விடுமுறை

மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வார இறுதி நாட்களை பார்க்கலாம்,

ஆகஸ்ட் 7: ஞாயிறு விடுமுறை

ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 14: ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 21: ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 28: ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!