தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழியின் மீது பற்றினை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க கூடிய தமிழ் திறனறிவு தேர்வு பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் திறனறிவு தேர்வு

தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக பல சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறிவு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வில் அனைத்து வகை பாடப்பிரிவினை எடுத்து படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம். தமிழ் மொழியில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை அதிகரிக்க இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, இந்த தேர்வில் நன்றாக மதிப்பெண் பெறும் முதல் 1500 மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் நடைபெற இருக்கும் இந்த தேர்வு குறித்து அவ்வப்போது முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 50 சதவீதமும், பிற பள்ளி மாணவர்கள் 50 சதவீதமும் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ‘இந்த’ மாதம் அதிகமான மழைப்பொழிவு – வானிலை மையம் அறிக்கை!

இந்த தேர்விற்கு 10ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் தங்களது தலைமையாசிரியர்கள் வழியே விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் . விண்ணப்பத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உள்ள மாணவர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடம் இது குறித்து தெரிவித்து தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!