Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அட்டோஸ் நிறுவனம், அதன் கிளை அலுவலகத்தில் அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் 15,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் இப்பதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

உலகளவில் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு IT நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தில் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் சுமார் 400% வேலைவாய்ப்புகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகரித்துள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனமான அட்டோஸ் அடுத்த 12 மாதங்களில் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 15,000 பேரை பணியில் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் செப்.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!

இந்த புதிய மெகா ஆள்சேர்ப்பு மூலம் இந்நிறுவனம் நாட்டில் உள்ள 40,000 ஊழியர்களுடன் கூடுதலாக 15,000 பேரை சேர்க்க உள்ளது. இது தொடர்பாக Atos நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலி ஜிரார்ட் கூறுகையில், ‘டிஜிட்டல் மயமாக்கலின் ஏற்றம் காரணமாக நிறுவனம் ஒரு உற்பத்தித்திறன் அதிகரிப்பை கண்டுள்ளது. அதனால் பெரிய அளவிலான டிஜிட்டல் மயமாக்கல், பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை, ஊதியம் – டிஜிபி சுற்றறிக்கை!

இது தவிர வரவிருக்கும் நாட்களில் சைபர் பாதுகாப்பு உலகின் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று அட்டோஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, இந்நிறுவனம் சம்பளம் மற்றும் திறமை போன்ற பணியாளர் தொடர்பான செலவுகளுக்காக ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி, அட்டோஸ் நிறுவனத்தின் பணி மீது ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் atos.net அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகுதி:

  • பொறியியல் மற்றும் கணினி பயன்பாட்டு பின்னணியை கொண்ட புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட இருக்கிறது.
  • அதன் கீழ் 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற முழுநேர பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
  • விண்ணப்பதாரர்கள் BTech, BE படிப்பில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், EEE, EE அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதலாக, 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஆங்கில மொழியில் நல்ல எழுத்து மற்றும் வாய்மொழி திறன்களையும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!