மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல் – பீதியில் பொதுமக்கள்!

0
மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல் - பீதியில் பொதுமக்கள்!
மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல் - பீதியில் பொதுமக்கள்!

மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல் – பீதியில் பொதுமக்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், அங்குள்ள பகுதிகளில் கலவரம் வெடித்த காரணத்தினால் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள ஹிர்ஹி பகுதிகளில் ஸ்ரீராம ஷோபா யாத்திரையின்போது பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்குள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மர்ம நபர்கள் சிலை மீதும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பல மக்கள் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

இதனால் அங்குள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பல வாகனங்களும் எரிக்கப்பட்டு சாம்பல் ஆக்கப்பட்டன. மேலும் அந்த தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலவரம் வெடிக்காமல் தடுக்க ஜார்கண்ட் போலீசார் தரப்பில் கூடுதல் படைகள் மற்றும் மூத்த அதிகாரிகள் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மூன்று கண்காணிப்பாளர் அங்கு உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

மேலும் அங்குள்ள பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் சிக்கி ஒருவர் பலியானதால் அதற்கான விசாரணையும் தற்போது தொடங்கியுள்ளனர். மேலும், தற்போது இந்த கலவரம் கட்டுக்குள் வந்து உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here