நடப்பு நிகழ்வுகள் – 14 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 14 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 14 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 14 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் C-295 MW போக்குவரத்து விமானமானது அறிமுகம்.

 • ஸ்பெயின் நாட்டில் உள்ள செவில்லியில் நாட்டின் முதல் சி-295 மெகாவாட் போக்குவரத்து விமானத்தை முறைப்படி இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானமானது மாபெரும் ஏர்பஸ் விமானம் மூலம் இந்தியாவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    
 • இந்திய விமானப்படையானது AVROக்கு பதிலாக 56 ஏர்பஸ் C-295 விமானங்களை வாங்குவதை இந்தியா முறைப்படுத்தியுள்ளது மற்றும் அதன் ஒரு பகுதியாக ஒப்பந்தத்தின்படி, ஏர்பஸ் முதல் 16 விமானங்களை செவில்லியில் வழங்க தயாராக உள்ளது. அனைத்து C-295 விமானங்களும் போக்குவரத்து கட்டமைப்பில் உள்நாட்டின் “எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட்” பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

 • பிரதமர் மோடி செப்டம்பர் 14 அன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டை உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மேலும் அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 6 ஆயிரத்து 350 கோடி மதிப்பிலான முக்கியமான ரயில் துறை திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த திட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பினா சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோ கெமிக்கல் வளாகம் உட்பட மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் அடங்கும் என்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கான ஒரு படியாக இந்த திட்டங்கள் அமையும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு தனியார் வேலை வாய்ப்பு இணையதளங்களுடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoUs) மேற்கொண்டுள்ளது.

 • நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை மேம்படுத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினுடைய தேசிய தொழில் சேவை (NCS) வலைத்தளத்துடன் ஒருங்கிணைக்க இந்தியாவின் முன்னணி தனியார் வேலை வாய்ப்பு இணையதளங்கள், நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் திறன் வழங்குநர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) செப்டம்பர் 12 அன்று மேற்கொண்டுள்ளது.
 • இது NCS வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் அத்தகைய காலியிடங்களுக்கு தடையின்றி விண்ணப்பிப்பதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

90-எல்லை உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

 • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மூலோபாய தவாங் பகுதிக்கு அனைத்து வானிலை இணைப்புகளை வழங்குவதையும் நெச்சிபு சுரங்கப்பாதையில் இருந்து கிழக்கு லடாக்கின் நியோமாவில் ஒரு முக்கிய இராணுவ விமானநிலையத்திற்கான பாதைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டுகிறார்.
 • செப்டம்பர் 12 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்களானது 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 90 – எல்லை உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • ராணுவ வீரர்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு(LAC) நகர்த்துவதற்கான இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொகாரோ ஆலை மற்றும் NBCC இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • NBCC நகர பகுதிக்கான திட்ட மேலாண்மை சேவைகளை வழங்குதல் மற்றும் நகர் உள்கட்டமைப்பின் பழுது மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்காக Bokaro இரும்பு ஆலை(BSL) மற்றும் ஜார்கண்ட் குரூப் ஆஃப் மைன்ஸ்  நிறுவனம் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
 • ரூர்கேலா ஆலை இயக்குநர் அதானு பௌமிக் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய குடியரசு தலைவர் ஆயுஷ்மான் பவ் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

 • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 13 அன்று  தேசிய தலைநகரமான புது தில்லியில் ஆயுஷ்மான் பவ் என்ற முக்கிய முன்னெடுப்பு பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
 • இந்த முன்னெடுப்பானது  நாடு தழுவிய அளவிலான ஒரு விரிவான சுகாதார முன்முயற்சி என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவைகளை நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்றடைவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

நான்காவது G20 நிலையான நிதி செயற்குழு கூட்டமானது வாரணாசியில் தொடக்கம்.

 • 2023 ஆம் ஆண்டிற்கான ஜி 20 அமைப்பின் நிலையான நிதி அறிக்கையை இறுதி செய்வதற்காக 4வது ஜி 20 நிலையான நிதி செயற்குழு கூட்டமானது உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான வாரணாசியில் செப்டம்பர் 14 அன்று தொடங்க உள்ளது.
 • SFWG – கூட்டமானது முக்கியமாக மூன்று முன்னுரிமை கருப்பொருளை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன.
  • 1. காலநிலை நிதிக்கான வழிமுறைகள் 
  • 2. நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிதியை செயல்முறை 
  • 3. நாட்டின் நிலையான வளர்ச்சியை நோக்கி நிதியளிப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை மேம்படுத்துவது.

பெரோஸ்பூரில் சரகர்ஹி நினைவிட வளாகத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அடிக்கல் நாட்டியுள்ளார்.

 • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், ஃபெரோஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சரகர்ஹி போரில் உயிர்நீத்த படைவீரர்களுக்கு செப்டம்பர் 12 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அந்த நினைவிடத்தில் முதல்வர் பகவந்த் சிங் மான், ஃபெரோஸ்பூரில் ஒரு சரகர்ஹி நினைவிடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார் மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த திட்டமானது முடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
 • கிட்டத்தட்ட 126 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 12, 1897 அன்று, பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தின் 36 வது சீக்கிய தளம் சார்ந்த படைப்பிரிவைச் சேர்ந்த 21 துணிச்சலான வீரர்கள் சுமார் 10 ஆயிரம் ஆப்கானி பழங்குடியினருக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 36வது சீக்கிய ரெஜிமென்ட் தற்போது இந்திய ராணுவத்தின் 4வது சீக்கிய ரெஜிமென்ட் என அழைக்கப்படுகிறதாகும்.

ஜெய்ப்பூரில் அணை பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டை துணை ஜனாதிபதி தன்கர் தொடங்கி வைக்க உள்ளார்.

 • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் அணை பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டை துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் செப்டம்பர் 14 2023 அன்று தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • அணை பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மை தொடர்பான அதிநவீன தலைப்புகளில் பல்வேறு நாடுகளில் உள்ள வல்லுநர்கள் ஒன்று கூடி விவாதிப்பதற்கு இந்த மாநாடானது ஒரு முக்கிய தளமாக அமைவதை நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.
 • இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன மற்றும் அதன்படி பெரிய அணைகளின் அடிப்படையில் இது உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்த அணைகளில் தோராயமாக 80 சதவீதம் 25 வயதுக்கு மேற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கவுகாத்தியில் ரூ.226 கோடி மதிப்பளவில் ‘யூனிட்டி வளாகம்’ அமைக்க திட்டம்.

 • தேசிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அதனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ‘மேக் இன் இந்தியா’ என்ற கருப்பொருளை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கத்துடனும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிப்பளவில் அசாம் மாநிலத்தின் முக்கிய நகரமான கவுகாத்தியில் ஒற்றுமை வளாகம் என்று பொருள்படக்கூடிய  ‘யூனிட்டி மால்’ (ஏக்தா மால்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்த ஆண்டின் தொடக்க கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ என்ற கருத்தை ஊக்குவிக்கும் முக்கிய பகுதியாக இந்த திட்டம் அமையும் என அறிவித்துள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ‘நந்தினி கிரிஷக் சம்ரித்தி யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

 • மாநிலத்தில் கால்நடைகளின் இனத்தை மேம்படுத்தி அதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அந்த திட்டத்தை பரவலாக்கவும் நந்தினி கிரிஷக் சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை நந்த் பாபா மிஷனின் கீழ் உத்தரப் பிரதேச அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது. 
 • இந்த திட்டத்தினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கியுள்ளார் மற்றும் பால் பண்ணையாளர்களின் வருமானத்தை உயர்த்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் மாடுகளின் இனத்தை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

நியமனங்கள்

EBRD அமைப்பின் புதிய நிர்வாக இயக்குநராக சுபாஷ் சந்திர ஜோஸ் நியமனம்.

 • புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கியானது(EBRD), தனது நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப துறைக்கான புதிய நிர்வாக இயக்குநராக சுபாஷ் சந்திர ஜோஸ் என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் இந்த பொறுப்பினை செப்டம்பர் 12 ஆம் தேதி ஏற்றுள்ளார் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இவர் வங்கியின் தகவல் தொழில்நுட்ப (IT) செயல்பாடுகள் மற்றும் நவீன டிஜிட்டல் நோக்கங்களின் அனைத்திற்கும் பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹரியானா திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு கொள்கை அமைப்பின் தலைவராக மிதா வஷிஷ்த் நியமனம்.

 • ஹரியானா மாநிலத்தின் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குக் கொள்கை அமைப்பின் குழுவை செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதலுக்காக நிறுவப்பட்ட ஆளும் குழுவின் தலைவராக மாநிலத்தின் புகழ்பெற்ற திரைப்பட நடிகையான மிதா வசிஷ்த் அவர்களை அம்மாநில அரசு நியமித்துள்ளது. 
 • இந்த  நியமனமானது இதற்கு முன்பு இருந்த நடிகர் சதீஷ் கவுசிக் அவர்களின் மறைவிற்கு பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேம்பட்ட அனுபவம் கொண்ட இவர் தனது சீரிய நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாஸ்காம் அமைப்பின் துணைத் தலைவராக கங்காதரன் நியமனம்.

 • மென்பொருள் மற்றும் சேவைக்கான தேசிய நிறுவனத்தின்(நாஸ்காம்) துணைத் தலைவராக சிந்து கங்காதரன் என்பவரை நியமித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக SAP லேப்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் மூத்த துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும். இவர் இந்த புதிய பொறுப்பின் மூலம் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் தனது அனுபவத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் TechAdeஐ வடிவமைக்க உதவுவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

சியாட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷஃபாலி வர்மா நியமனம்.

 • இந்தியாவின் முன்னணி வாகன சக்கரம்(tyre) தயாரிப்பாளரான CEAT நிறுவனனமானது, கிரிக்கெட்டுடனான அதன் தொடர்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஷஃபாலி வர்மாவை அதன் விளம்பர தூதராக சமீபத்தில் அறிவித்துள்ளது.
 • 15 வயதில், ஷஃபாலி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளம் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் இந்த நியமனத்தின் மூலம் நிறுவன உறுதிப்பாட்டை மேம்படுத்துவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிஹாட் விமான நிறுவனத்தின் விளம்பர தூதராக கத்ரீனா கைப் நியமனம்.

 • UAE இன் தேசிய Etihad Airways நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக பாலிவுட் நட்சத்திரமான கத்ரீனா கைப்பை நியமித்துள்ளதாக அந்நிறுவனத்தின் செப்டம்பர் 2023 அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இந்த நியமனத்தின் மூலம் அவரின் முக்கிய முன்னெடுப்புகள் படி நிறுவனத்தை மேம்படுத்துவார் என தெரிவித்துள்ளது.

முக்கிய தினம்

இந்தி திவாஸ் (அ) இந்தி தினம் 

 • இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ) இந்தியை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் நாளானது தேசிய இந்தி திவாஸ் அல்லது தேசிய இந்தி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியானது நாட்டின் அரசியலமைப்பின் கீழ் இந்தி மொழியை நாட்டின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் இந்தியின் பங்கை இந்த நாள் அங்கீகரிப்பதாக அமைகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!