தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – முதல்வரின் தனிப்பிரிவு விளக்கம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை - முதல்வரின் தனிப்பிரிவு விளக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – முதல்வரின் தனிப்பிரிவு விளக்கம்!

தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் 14 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் விளக்கம் அளித்துள்ளது.

தற்செயல் விடுப்பு

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் காணப்பட்டு வரும் கொரோனா பேரலை தொற்றுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஆனால் இந்த விடுமுறை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாத பட்சத்தில் அரசு ஊழியர்களிடையே ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் 14 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வந்த பாக்கியா, சந்தோசமாக இருக்கும் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதாவது, மக்களின் குறைகளை தீர்க்கும் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கணவருக்கு விடுப்பு கேட்டு ஆசிரியை ஒருவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தனது கணவருக்கு சொந்த விடுப்பு கேட்கப்பட்டு அரசு ஊழியர் ஒருவர் அறிவுறுத்தி இருந்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது சிறப்பு விடுப்பு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு – மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதில், ஒரு அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தை சுட்டி காட்டி விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த வகையில் 2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!