விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளர்கள் ஸ்ருதி மற்றும் நாடியா சாங் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து மற்றவர்களுக்கு சர்பிரைஸ் என்ட்ரி கொடுப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெற்றிகரமாக இறுதி வாரத்திற்கு முன்னேறி இருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. சுமார் 100 நாட்களை கடந்திருக்கும் இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தற்போது ராஜு, பிரியங்கா, நிரூப், பாவனி மற்றும் அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான வோட்டிங் ப்ராசஸ் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இவர்களில் தகுதியுடைய ஒருவர் தான் ‘பிக் பாஸ்’ டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு வந்த பாக்கியா, சந்தோசமாக இருக்கும் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

என்றாலும் மக்களின் பேராதரவை பெற்று ஒவ்வொரு முறையும் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்பட்டு வரும் போட்டியாளர் ராஜு இம்முறை ‘பிக் பாஸ்’ டைட்டிலை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல பிரியங்கா 2வது இடத்தை பிடிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இப்படிப்பட்ட கலவரமான சூழலில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் எவ்வித டாஸ்குகளும் இல்லாமல் போட்டியாளர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவிடம் சத்தம் போடும் முல்லை, பொங்கலுக்கு கூப்பிட்ட கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அந்த வகையில் வழக்கம் போல இந்த முறையும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களை மகிழ்விப்பதற்காக முன்னாள் போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இது தொடர்பான வெளியான ப்ரோமோவில் முதல் என்ட்ரியாக போட்டியாளர்கள் ஸ்ருதி மற்றும் நாடியா சாங் இருவரும் தாம்பலத்தில் பட்டு புடவையுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களின் என்ட்ரியை அனைவரும் கொண்டாட, நிரூப்பின் தோற்றத்தை பார்த்து ஹீரோ ஆகி விட்டதாக பாராட்டுகிறார் ஸ்ருதி. அதே போல இறுதி போட்டியில் பங்குபெற இருக்கும் அனைவருக்கும் ஸ்ருதி வாழ்த்து சொல்வது போல வெளியான ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!