மத்திய கல்வி நிறுவனங்களில் 13,701 காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சர் தகவல்!

0
மத்திய கல்வி நிறுவனங்களில் 13,701 காலிப்பணியிடங்கள் - கல்வி அமைச்சர் தகவல்!
மத்திய கல்வி நிறுவனங்களில் 13,701 காலிப்பணியிடங்கள் - கல்வி அமைச்சர் தகவல்!
மத்திய கல்வி நிறுவனங்களில் 13,701 காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சர் தகவல்!

மத்திய கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் (CEIs) காலியாக இருக்கும் சுமார் 13,701 இடங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

ஆசிரியர் பணியிடங்கள்

தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் (CEIs) 13,701 ஆசிரியர் பணியிடங்களில் காலியிடம் ஏற்பட்டுள்ளகவும் அந்த காலியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். அமைச்சரின் இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்து கூறுகையில், ‘மத்திய கல்வி நிறுவன காலியிடங்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

Airtel வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar ரீசார்ஜ் திட்டங்கள் – ஒரு வருட வேலிடிட்டி!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் உள்ளடங்குவதாகவும், குறிப்பாக SC, ST, OBC மற்றும் EWS பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை சிறப்பு இயக்கி மற்றும் பணி முறையில் ஓராண்டு காலத்திற்குள் நிரப்புமாறு அனைத்து CEIகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 2022 – அரசின் முக்கிய அறிவிப்புகள்!

இந்த பதிலை தொடர்ந்து அதிருப்தி தெரிவித்த வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘குறிப்பாக இடஒதுக்கீடு பிரிவில் உள்ள ஒவ்வொரு பிரிவினருக்கான காலியிடங்களை பிரிப்பது தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் முழுமையாக பதிலளிக்கவில்லை. இந்த நிறுவனங்கள், இடஒதுக்கீடு பிரிவினருக்கான காலியிடங்கள் குறித்த பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசாங்கம், அவர்களின் வழிகாட்டுதல்களின்படி உள்ளதா என்பதைச் சரிபார்த்து, பொது மன்றத்தில் காலியிடங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!