நடப்பு நிகழ்வுகள் – 13 செப்டம்பர் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 13 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் - 13 செப்டம்பர் 2023
நடப்பு நிகழ்வுகள் – 13 செப்டம்பர் 2023

தேசிய செய்திகள்

டேராடூனில் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

 • மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 12 அன்று உத்தரகண்டின் தலைநகரமான டேராடூனில் வித்யா சமிக்ஷா கேந்திராவை திறந்து வைத்துள்ளார். மேலும் அதே வேலையில் அவர் மாநிலத்தில் 141 PM-Shri பள்ளிகள் முதற்கொண்டு 3 நேதாஜி சுபாஷ் சந்திரா குடியிருப்பு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
 • குஜராத் மாநிலத்தை தொடர்ந்து உத்தரகண்ட் ஆனது இரண்டாவது மாநிலமாக வித்யா சமிக்ஷா கேந்திரா அமைப்பை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது மாநிலத்தில் உள்ள கல்வி துறை தகவல்களை இணையதளத்தில் தேவைப்படுபவர்களுக்கு எளிதாக வழங்குவதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகும்.

கிராமப்புறங்களில் FTTH இணயத்தள வடங்களை விரிவுபடுத்துவதற்காக DoT ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

 • சிறு மற்றும் குறு கிராமப்புறங்களில் ஃபைபர்-டு-வீடுகளுக்கான FTTH இணயத்தள வடங்கள் இணைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்காக இணைய சேவை வழங்குநர்களை அங்கீகரிக்கும் திட்டத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது. 
 • ஒரு ஆண்டில் கிராமப்புறங்களில் அதிகபட்ச இணைப்புகளை வழங்கிய ஏ, பி மற்றும் சி ஆகிய மூன்று வகை இணைய சேவை வழங்குநர்களை அங்கீகரிக்கும் நோக்குடன் இந்த திட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 • மேலும் இந்த அங்கீகாரத்தில் சான்றிதழுடன் இணைய சேவை வழங்குனர்களின் பெயர் மத்திய தொடர்புத் துறை இணையதளத்தில் காட்டப்படும் எனவும் கிராமப்புறங்களில் டிஜிட்டல் அணுகல் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உரிமைகள் பற்றிய முதல் உலகளாவிய கருத்தரங்கம் தொடக்கம்.

 • விவசாயிகளின் உரிமைகள் குறித்த ஆய்வு செய்வதற்காகவும் அதனை மேம்படுத்துவதற்காகவும் முதல் உலகளாவிய கருத்தரங்கை தேசிய தலைநகரமான புதுதில்லியில் செப்டம்பர் 12 அன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார்.
 • இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை தொழில் புரிபவர்களை அன்னதாதா என்று குறிப்பிட்டுள்ளார். 2001 இல் அமைக்கப்பட்ட தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் சட்டத்தின் மூலம், தாவர வகைப் பதிவின் பின்னணியில் விவசாயிகளின் உரிமைகளை உள்ளடக்கிய உலகின் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 12வது பொருளாதார மற்றும் நிதி உரையாடல்(EFD) கூட்டமானது புது தில்லியில் நடைப்பெற்றுள்ளது.

 • இந்தியா-இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் நிதியியளுக்கான கூட்டத்தின் 12வது சுற்று ஆனது செப்டம்பர் 11 அன்று தேசிய தலைநகரமான புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
 • இரு நாடுகளும் தங்களின் நிதிச் சேவைகளில் கூட்டுறவு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும், நிதிச் சேர்க்கை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரஸ்பர வழிமுறைகளை ஆதரிப்பதற்கும் தங்களது உறுதிப்பாட்டினை வலுப்படுத்துவதனையும் நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இதில் குறிப்பாக மேக்ரோ பொருளாதார வளர்ச்சி குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய கடற்படை மற்றும் Uber இடையே பாதுகாப்பான பயணம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளது.

 • இந்திய கடற்படை மற்றும் Uber நிறுவனம் இடையே நாடு முழுவதும் உள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் தனிப்பட்ட பயணம் மற்றும் அரசுமுறை பயணங்களுக்கு நம்பகமான, வசதியான, சிக்கனமான மற்றும் பாதுகாப்பான இயக்க தீர்வுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
 • ‘ஷிப்ஸ் ஃபர்ஸ்ட்’ என்ற முன்னெடுப்பின் கீழ், ‘மகிழ்ச்சியான பணியாளர்கள்’ என்ற CNS இன் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது மற்றும் இது முப்படை ராணுவ ஆயுதப் படைகளின் முதல் முயற்சி என்பது குறிப்பிடதக்கதாகும். இது மத்திய அரசாங்கத்தின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் தொலைநோக்கு மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு பகுதியாக அமைவது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக நயாரா எனர்ஜி நிறுவனத்துடன்  NTPC கிரீன் எனர்ஜி நிறுவனமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 • இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த மின் உற்பத்தியாளரான NTPC நிறுவனத்தின் துணை நிறுவனமான NTPC Green Energy Limited (NGEL) மற்றும் சர்வதேச அளவிலான புதிய யுக சர்வதேச கீழ்நிலை எரிசக்தி நிறுவனமான நயாரா எனர்ஜி நிறுவனம் ஆகியவை செப்டம்பர் 11 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டுள்ளன.
 • பசுமை ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் குறித்த விண்வெளியில் வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் நயாரா எனர்ஜியின் நிறுவனத்தின் கேப்டிவ் பயன்பாட்டிற்காக பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல், கார்பனேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் மற்றும் கார்பன் தடம் குறைவதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும்.

மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக NIT-C மற்றும் IMHANS நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மேம்பட்ட மனநல அணுகலை உறுதி செய்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக, கோழிக்கோடு பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம்(NIT-C) மற்றும் கோழிக்கோடு சார்ந்த மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்(IMHANS) இடையே செப்டம்பர் 11 2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
 • மத்திய மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என NIT-C நிறுவன இயக்குனர் பிரசாத் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் இந்தியா தனது முதல் கடல் நீரில் மூழ்கும் ‘மத்ஸ்யா 6000’ கப்பலை அறிமுகப்படுத்த உள்ளது.

 • விஷ்ணுவின் முதல் அவதாரம் அல்லது மாபெரும் மீன் என்று பொருள்படக்கூடிய “மத்ஸ்யா 6000” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலானது 2024 ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலேயே சென்னை கடற்கரைவங்காள விரிகுடாவில் அறிமுகமாகும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கப்பலானது கிட்டத்தட்ட நீருக்கடியில் 6000 மீட்டர் ஆழத்தில் மூழ்கி விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் மாங்கனீசு, கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற கனிமங்களைத் தேடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

டாக்காவில் இந்திய உயர் ஆணையமானது “மியூசிக்கல் சோயரி” என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

 • வங்கதேச தலைநகரமான டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம்(IGCC) மற்றும் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையமானது செப்டம்பர் 11 2023 அன்று டாக்காவின் சயானத் மைதான வளாகத்தில்  ‘மியூசிக்கல் சொய்ரி’ என்ற ஒரு இசை முன்னெடுப்பை ஏற்பாடு செய்துள்ளது. 
 • புகழ்பெற்ற கிளாசிக்கல் பாடகர் பண்டிட் அலோக் சென் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இது இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதாகவும் இரு நாடுகளின் நட்பு உன்னதத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன என இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.

டாக்காவும் பாரிசும் பல்வேறு துறை மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

 • நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பு மற்றும் செயற்கைக்கோள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக டாக்கா மற்றும் பாரிஸ் ஆனது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செப்டம்பர் 12 2023 அன்று மேற்கொண்டுள்ளன.
 • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது வங்கதேச தலைநகரமான டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 • சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச நாட்டிற்கு செல்லும் முதல் பிரெஞ்சு ஜனாதிபதி என்ற பெருமையை மக்ரோன் பெற்றுள்ளார். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பருவநிலை வளர்ச்சி என பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன.

மேம்பட்ட விண்வெளி இணைப்புக்கான ஒளியியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்டெல்சாட் மற்றும் அலிரியா ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

 • செயற்கைகோள் தொழில்நுட்பம்(சாட்காம்) சார்ந்த நிறுவனமான இன்டெல்சாட் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை  தளமாகக் கொண்ட அலிரியா நிறுவனமானது தரை மற்றும் விண்வெளிக்கு இடையில் தரவுகளை பரிமாற்றி கொள்வதற்கான புதிய ஒளியியல் தொழில்நுட்பத்தை உருவாக்க ஒரு வணிக ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளன.
 • கைபேசி மற்றும் ஒளியியல் தொழில்நுட்ப இணைப்புகளை செயல்படுத்தும் மற்றும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வழிமுறைகள், 5G மற்றும் பல-அடுக்கு செயல்பாடுகள் மூலம் தொழிநுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

PM DAKSH என்ற வலைத்தளம் அறிமுகம்.

 • செப்டம்பர் 11 2023 அன்று மத்திய அரசாங்கம் PM DAKSH-DEPwD என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள், பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் வேலைகளை அணுகக்கூடிய “ஒரு நிறுத்த டிஜிட்டல் இலக்காக” செயல்படுவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.
 • இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறை (DEPwD) இணையத்தளத்தில் கிட்டத்தட்ட 25,000 வேலைகளை முதற்கட்டமாக சேர்க்கும் இலக்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

குஜராத் அரசு 4,000 கோடி மதிப்பளவில் கிட்டத்தட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

 • மாநிலங்களில் 4,000 கோடி முதலீடு மதிப்பளவில் கிட்டத்தட்ட 25,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக குஜராத் மாநில அரசாங்கமானது செப்டம்பர் 12 அன்று கிட்டத்தட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்(MoUs) கையெழுத்திட்டுள்ளது. 
 • இதில் குறிப்பாக ஷ்யாம் ஃபேஷன் இந்தியா நிறுவனமானது ரூ. 103.25 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அகமதாபாத் மாவட்டத்தின் பாவ்லா தாலுகாவின் கங்காட் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது மார்ச் 2024 க்குள் செயல்படத் தொடங்கும் எனவும் இதன் விளைவாக கிட்டத்தட்ட 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் அம்மாநில அரசாங்கமானது தெரிவித்துள்ளது.

‘பாரத்: ஜனநாயகத்தின் தாய்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 • செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் வளாகத்தில் ‘பாரத்: ஜனநாயகத்தின் தாய்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கிய கண்காட்சியை இந்திய அரசாங்கத்தின் மத்திய கலாச்சார அமைச்சகம் தொகுத்துள்ளது.
 • இதில் பார்வையாளர்கள் உள்ளடக்கத்தை எளிதாக படிக்க கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் 16 வெவ்வேறு மொழிகளில் ஒலிப்பதிவைக் கேட்கவும், வழியின் ஒரு பக்கத்தில் உள்ள 26 ஊடாடும் பேனல்கள் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வரலாற்றை கண்முன்னே கொண்டு வருவது இதன் சிறப்பாகும். மேலும் நவீன இந்தியாவில் தேர்தல்கள், குழுக்கள் உள்ளாட்சி சுயாட்சி, கிருஷ்ண தேவ ராயா, ஜெயின் தர்மம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளின் புகைப்படங்கள், சிலை மற்றும் ஒளிப்பதிவினை உள்ளடக்கியதாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

LRN கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக டீன் ரோஜர்ஸ் நியமனம்.

 • நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளுக்கான இணக்க தீர்வுகளில் முன்னணியில் உள்ள LRN கார்ப்பரேஷன் நிறுவனமானது, நிறுவனத்தின் கொள்கை ரீதியான செயல்திறனை ஊக்குவிக்கவும் அதனை மேம்படுத்தவும், ஆசிய-பசிபிக் பிராந்தியம் சார்ந்த பகுதிகளின் மூத்த துணைத் தலைவராக டீன் ரோஜர்ஸ் என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • இவர் டோக்கியோ அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள குழுக்களை மேற்பார்வையிடும் பொறுப்புடன்,  ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் LRN இன் வணிக மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் குழுவினை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலியே நிறுவனத்தின் CFO ஆக ரோஜான்ஸ்கி நியமனம்.

 • சுய-ஓட்டுநர் தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய தொழிநுட்ப தயாரிப்பாளரான Mobileye Global நிறுவனமானது, செப்டம்பர் 12 2023 அன்று அதன் தலைமை நிதி அதிகாரியாக மோரன் ரோஜான்ஸ்கி என்பவரை நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 • கடந்த ஜூன் மாதம் இந்த பொறுப்பிலிருந்து விட்டு விலகியதை தொடர்ந்து இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 43 வயதான இவர், 2016 முதல் இஸ்ரேலை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் எனவும் தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் நிறுவனத்தை மேம்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!